எல்லாமே அழகுதான்
கோயில்
அழகுதான்.
அதில் ...எல்லோர் மனதிலும்
குடியிருக்கும் இறைவன்
வரம் கொடுக்கும் வரை ....
குடும்பம்
அழகுதான் .
அதனுள் வாழும் உயிர்களோடு
குடியிருக்கும் உறவினர்கள்
போராடும் வரை ...
துயில்
அழகுதான் .
அதனுள் சோம்பியிராமல்
நாம் விழித்திருந்து
கனவு காணும் வரை ...
கருணை
அழகுதான் .
பிறர் .மனங்களோடு
நாம் நம்பிக்கையோடு
நினைக்கும் வரை ...
ஆசை
அழகுதான் .
அதுவே நம்மை அழிவுப் பாதைக்குச் செல்ல
தூண்டாதிருக்கும் வரை ..
துன்பம்
அழகுதான் .
அதுவே பிறர் தீய எண்ணங்களில்
நம்மைத் தீண்டாதிருக்கும் வரை ..
இன்பம்
அழகுதான்.
பிறர் மனதால் நம்மை
நோகாதிருக்கும் (புண்படுத்தாது)வரை ....
அன்பு
அழகுதான் .
அதுவே பிறரிடம் நம்மால்
வெறுக்காது அடிமையாகும் வரை ...
சிற்பம்
அழகுதான் .
உளியினால் செதுக்கும்
சிற்பிக்கு கைகள் வலிந்து
ஓயும் வரை ...
கலை
அழகுதான்.
அதனை உருவாக்கிய
கலைஞனை மகிழ்விக்கும் பொருட்டு
பாராட்டும் வரை ...