வறுமை

வறுமை

பசி வயிற்றை கிள்ளும் -
பழைய சோற்று பருக்கை கூட
பட்டினி தீயை அணைக்க இருக்காது .
குளிரும் வெயிலும் உடலை வாட்டும் -
குடியிருக்க குடிசை இருக்காது.
மானத்தை மறைக்க
மாற்று துணி இருக்காது.
உழைக்க உடம்பு இருந்தும்
ஊழியம் செய்ய வாய்ப்பு இருக்காது.
பசித்த குழந்தைக்கு
பால் இருக்காது.
நம்மை சுற்றி மனிதர் கூட்டம்
ஆனால்
மனித நேயம் கிடைக்காது .
வறுமையிலும் கொடிய வறுமை
மனிதநேயம் இல்லா மனிதர்கள்
மத்தியில் வாழ்வதே .

எழுதியவர் : ராமமூர்த்தி Janakiraman (18-Nov-12, 6:02 am)
Tanglish : varumai
பார்வை : 453

மேலே