வரவேற்புரை பகுதி 2 (இறுதி)

வாருங்கள்!

இவற்றை
புரிந்து, கற்று, மகிழ்ந்து
உங்கள் இதயத்தை
உணர வாருங்கள்.

இந்த மங்கள வாத்தியத்தில்
முகாரி இல்லை.
நீலாம்பரி இல்லை

இவற்றிற்கு
பூபாளத்தின்
தொனியே புரியாது!
இவை—
தமது வானில்
இருட்டையே கண்டதில்லை!

இந்த ஆனந்த ராகத்தில்--
மனக் கோட்டை மதில்களின்
ஆக்ரமிப்பு இல்லை!
சோக ராகத்தின்
சேமிப்பு இல்லை!
ஆனந்த பைரவியின்
ஆர்பரிப்பும் இல்லை!

இவற்றை எல்லாம்
தவிர்த்து, விடுத்து,
தனித்து நிற்கும்
ஒரு ரம்மிய ராகமிது!
ஆழ்ந்த அமைதி கலந்த
ஆனந்தம் உண்டு இதில்!

உங்கள் மனக் காயங்களுக்கு
மருந்து உண்டு இதில்.
உங்கள் மனச் சஞ்சலங்களுக்கு
விடைகள் உண்டு.
உங்கள் பயம் கலந்த பார்வைக்கு
குளுமை உண்டு
இந்த
மங்கள வாத்தியத்தில்!

இந்த ராகங்களில்
ஆணவம் இல்லை: அதிகாரம் இல்லை!
சலனம் இல்லை: சஞ்சலம் இல்லை!
சோகம் இல்லை: சாபம் இல்லை!
உங்கள் எதிர்கால கேள்விகளுக்கு
ஆச்சரியக் குறியும் இல்லை!

இவற்றில்—
ஆறுதல் உண்டு: அரவணைப்பு உண்டு!
உறுதி உண்டு: உயர்வு உண்டு!
வேடிக்கை உண்டு: கேளிக்கை உண்டு!
உங்களுக்கு தேவையான
மனக் களிப்பும் உண்டு!
சாஸ்வதம் உண்டு! சமரசம் உண்டு!
சஞ்சல மனங்களுக்கும்
சம இடம் உண்டு!

இவற்றில்—
துள்ளல் உண்டு! துயரம் இல்லை!
சந்தேக தூண்களுக்கு
சாய்விடம் உண்டு!

வாருங்கள்!
இந்த சுகம் தரும்
மங்கள வாத்தியத்தில்
உலகை மறந்து
உள்ளங்களை மறந்து
உங்களையும் மறந்து
உங்கள் ஆத்மாவிற்கு
சுகம் தர வாருங்கள்!


வரவேற்புரை வாசித்தது
மங்காத்தா

(நன்றி)

எழுதியவர் : மங்காத்தா (18-Nov-12, 12:37 am)
பார்வை : 2457

மேலே