நிலவே உனக்கு யார் தாலாட்ட...
பூமித்தாயின்
மனம் குளிர
முகில் தான்
வந்து
மழையாய் இறங்க...
கிளையிலாடும்
தொட்டிலில் விசும்பும்
குழந்தைக்கு
தாயின் தாலாட்டு
சுகமாய் இனிக்க...
கூட்டுக்குள்ளே
வாய் பிளக்கும்
குஞ்சுக்கு
தாய் பறவை
இரைதனயே
இதமாய் கொடுக்க...
ஆகாயத்தொட்டிலில்
அழுதுகிடக்கும்
நிலவே
உனக்கு
யார் தான் தாலாட்ட...