கோழை ஜாதிகள்... நாளைய துக்கங்கள்....!

பக்கத்து பக்கத்தில் நடக்கையில்
பாதச் சுவடுகள் பாடல் அமைத்தது

தோள்கள் தொட்டுக் கொண்டதில்
தூய இசை நெஞ்சம் இசைத்தது

விரல்கள் பின்னி வியந்த போது
வீசியது தென்றல் நினைவுக்குள்ளே....

நிழலாய் போனதேன் ? நெஞ்சத்தின் காதல்...
நிற்கிறோம் தலைகீழாய் ஆவியென மரத்தில்...!

நீ வேறு ஜாதி நான் வேறு ஜாதி அல்ல
தற்கொலை செய்த இருவரும் கோழை ஜாதி...!

அவசரப் பட்டே ஆருயிர் விட்டோம்....
அனுபவிப்போம் நரக வாழ்க்கை.....
ஆசையுண்டன் ஆசையுடன்...!

எழுதியவர் : (21-Nov-12, 10:39 pm)
பார்வை : 179

மேலே