தரிசனம் தருவாயா,,,???
தரிசனம் தருவாயா,,,???
முத்தத்தின் போது என் மீசையினால்
ஒரு மோகமுள் உன் பட்டுக்கன்னத்தில்
குத்திவிட துடிக்கிறேன்,,அந்த கன்னம்
தழுவிய ககைகளினால் அன்னம் பிசைந்து
கொடுத்துவிட நினைக்கிறேன்
உறக்கமிழந்து ஒரு போர்வைக்குள் நீயும்
நானும் கோர்வையாய் நடத்திக்கொள்ளும்
ஒரு உறவுச்சண்டை,, இதில் வெற்றித்
தோல்விகள் தான் யாருக்கு,,??
காலை நேர விடியலில் உன் முகத்தில்
சிறுபனி துளி சிந்த ஏனோ அதை பருகிவிட
தவித்து பாழாய் போகிறது என் மனம்
என் ஒருநொடி முகக்கழுவல் மோகநாடகம்
உன் வியர்வை கலந்த நீராடிய நீரள்ளி ஒற்றிக்
கொள்ளுகிறேன்,,,உன் வாசங்களோடு ஒரு
வாசகமாய் அன்று முழுவதும் பிதற்றித்திரியவே
பெண்மைக்கடலில் நீந்தத்தெரியாதவன்தான்
இவன் இருந்தும் இன்று ஏனோ துணிந்தவனாய்
விரைகிறேன்,,உன் முத்தக்குவியலில் முழுநேர
முத்தெடுக்க
என் முகம் பார்த்து நீ சிந்தும் முத்துச்சிதறல்
புன்னகையில் முழுவதுமாய் என்தேகம்
சாய்ந்து விழுகிறது ஒரு திருவிழா தேராய்
அனுசரன்,,,,