[375 ] குறுகுறுப் பாக்கள் -26
நல்லவர் ஞானப் புத்திரர் -இந்த
நாட்டிலே நிறையவே உண்டு!
சொல்லவர் எடுபட வில்லை-சுற்றி
சூதாடு வோர்பல கண்டு!
வெல்லுவோர் ஒன்றிரண் டுண்டு!- அவர்
விலக்கெனக் கொள்ளுவார் உண்டு!
பல்வலிக் காரணம் காட்டி- இங்கே
பல்விளக் காதவர் முன்நான் கோட்டி!
சகுனிகள் கூனிகள் நாட்டில் -மக்கள்
'சாரி'கள் இழப்பது வேமிக நேர்த்தி!
*****************************************************
சிந்தனை ஒன்றால் மட்டும்
*** சிறப்புகள் வந்து சேரா!
நிந்தனை யற்ற சொல்லும்
*** நிகழ்த்து,நற் செயலும், தன்பால்
வந்தவர்க் குதவும் பண்பும்
*** வாய்த்திடச் சிறப்பெல் லாமே,
வந்துநின் பாதம் கண்டே
*** வணங்கிடும்! உயர்த்தும் உன்னை!
*************************************************************
குப்பைகள் மலைபோல் குவிதலும் இல்லை!
குணமலை குன்றெனக் குறைவது மில்லை!
தப்புகள் சாதனைத் தடயங்க ளில்லை
தண்டனைத் தப்புவோர் தலைவரு மில்லை!
***************************************************************