[376 ] விடைதேடும் கேள்விகள் ..

எல்லாக் கலைகளையும்
கற்றவர்களாகத்தான்
வெளிவருகிறார்கள்
நம் இளைஞர்கள்..!
கட்டைவிரல் இழந்த
ஏகலைவர்களாக. ஏன்?.
*********************************************
பிச்சை எடுப்பது குற்றமே!
'ரேஷன்' அட்டை உள்ளவர்களுக்கு மட்டும்
சமுதாயக் கூடத்தில்
விலையில்லாப் பொருட்கள்
வழங்கப்படுவது ஏன்?
***************************************************
கல்லூரிச் சாளரத்தின் வழியே
பார்த்த வானவில்
வெளியே வந்ததும்
காணாமல் போனதேன்?
****************************************************

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (23-Nov-12, 1:16 pm)
பார்வை : 239

மேலே