காதல் காய்ச்சல்.........
அன்பே,
முல்லையின் வாசம் வீசும்
அந்த மாலை பொழுதில்
மலரே உன் பார்வை என் பக்கம்
ஒரே ஒரு நொடிப் பொழுதுதான்,
உன் பார்வை மழை பட்டதும்,
என்
உடம்பிற்குள் மின்சாரப் பாய்ச்சல்,
மனதிற்குள் வந்து விட்டது
காதல் காய்ச்சல்.....
அறிகுறிகள் எனக்குள் ஆயிரமடி,
என்னாலேயே
அறிந்து கொள்ள முடியாதது தான்
மிகப் பெரிய அதிசயமடி..............
விழிகள் உன்னை தேடுகிறது
இதழ்கள் உன் பெயரை பாடுகிறது
தனிமை ரொம்பவும் பிடிக்கிறது
அதில் உன் நினைவே
சுகமாய் இருக்கிறது......
பகல் என்றால் பசி இல்லை,
இரவென்றால் தூக்கம் இல்லை,
இரு பொழுதுகளிலும்
உன் நினைவைத் தவிர வேறெதுவுமில்லை....
மின்னல் போன்ற உன் பார்வையால்,
என் மனதிற்குள் அடை மழையாய்
உன் நினைவுகள்...........
அன்பே,
இந்த காதல் காய்ச்சலுக்கு
நான் எழுதும் கவிதையே தற்காலிக மருந்து,
இது முழுமையாய் குணமடைய நீயும்
என்னை விரும்பு.................