கோடிட்ட இடத்தை நிரப்புக

வயிற்றிலும் எரியலாம்
அடுப்பிலும் எரியலாம்
--------------------------------
விழிகளில் வழியலாம்
வழிகளில் குழியெல்லாம்
--------------------------------
புதையுண்டு தூங்கலாம்
வழியுண்டு தாங்கலாம்
---------------------------------
நாசியில் நுழையலாம்
நுரையீரல் நிறையலாம்
------------------------------------
வானவிலாய் வளையலாம்
காணவில்லை கலையலாம்
------------------------------------
கோட்டினை நிரப்பலாம்
பூதப்பாட்டினை படிக்கலாம்.

எழுதியவர் : கில்லாடிக்கிறுக்கன் (24-Nov-12, 9:25 am)
சேர்த்தது : கலைச்செல்வன் க
பார்வை : 226

மேலே