நமக்குள் நாம் தொலைந்துவிட்டோம்

நாளும் எனதே அதன் நாழியும் எனதே
நொடிகளில் நீ வசிப்பது ஏன்

இதயமும் எனதே அதன் துடிப்பும் எனதே
ஓசைகள் உன்னை உச்சரிப்பது ஏன்

இரவும் எனதே அதன் தூக்கமும் எனதே
கனவுகள் உனக்கு சொந்தமாவது ஏன்

நிஜங்களும் எனதே அதன் நிழல்களும் எனதே
நினைவுகள் உன்னை தேடுவது ஏன்

உனக்குள் நான் வாழ எனக்குள் நீ வாழ
நமக்குள் நாம் தொலைந்துவிட்டோம்

எழுதியவர் : Anusha (27-Nov-12, 3:29 pm)
சேர்த்தது : Sahaya Anusha
பார்வை : 169

மேலே