நினைவுக்குளியல்,,,,
நினைவுக்குளியல்,,,,
என் வாசற் படிக்கட்டுகளில்
உட்கார்ந்தவனாய் எதையோ
யோசித்தவண்ணம்
இயற்கையை இரசிக்கிறேன்
வெளிவாசல் குழிகளில்
பெய்து தேங்கிய மழைநீரில்
என்னிழலின் ஒரு பாகமானது
அழகிய ஓவியமாய் தென்படுகிறது,,,
நீளும் இந்த இரவினூடே,,,காய்ந்த
என் நினைவுகளும் நீளுகிறது
வீதிவிளக்கின் வெளிச்சங்களில்
பிரகாசமாக வளர்ந்து நிற்கும்
என் பிம்பமதை பௌர்ணமியவள்
மெதுவாய் எட்டிப்பார்க்கிறாள்,,,
அவளும் என்னோடு ஏதோ
ஒரு காதல் உரையாடுகிறாள்
என்பதை போல் அதில்
ஒரு கற்பனைத்தோன்றல்,,,,
பௌர்ணமி இரவே
உன்னை ஒருநாள் எனக்கு
இரவல் கொடுப்பாயா,,,
அவளின் பௌர்ணமி
முகத்தை அதில்நான்
பதிக்க ஆசைக்கொள்கிறேன்
ஏன் ஸ்தம்பிக்கிறாய்,,,???
ஓ அமாவாசைக்காய்
காத்திருக்கிறாயா ,,,???
குளிர்த்தென்றல் ஆசையாய்
என்னை வருடி விட
இரவின் அழகில்
வெண்ணிலா மகளோடு
குளம் குளமாய் ஒரு
நினைவுக்குளியல்,,,
அதை நினைக்கையிலே
என் மனம் ஏனோ காற்று நிரப்பிய
இரப்பர் பலூனாய் லேசாக
மாறி மேலே மேலே பறக்கிறது
அனுசரன்