இது எப்படி சாத்தியமாகிறது ?

மறக்க நினைக்கிறேன் உன்னை மட்டுமல்ல,
மரித்து விட்ட நம் காதலோடு, உன் நினைவுகளையும்.........
ஆனால்,நினைவுகளின் வீரியம் கூடி நிகழ்காலம் மறைந்து போகிறது,
அன்று நீ பேசிய காதல் மொழிகள் நெஞ்சில் நினைவுகளாய் நூல்பிடித்து நாற்று நடுகின்றது,
உரமிடாமல்,நீர்பாய்ச்சாமல் அசுரத்தனமாய் அது வளர்ந்தும் நிக்கிறது. வறண்டு கிடக்கும் வானம் பார்த்த பூமியான என் நெஞ்சில், இது எப்படி சாத்தியமாகிறது பெண்ணே ?

எழுதியவர் : தஞ்சை சோழன் (3-Dec-12, 8:53 pm)
பார்வை : 117

மேலே