ஒரு பயணம்
அந்தி மயங்கிய வானம்
முந்தும் மரங்களின் கானம்
தனியொருவனாய் நடக்கின்றேன்
தாமிரபரணிக் கரையில் ............
நுரை தள்ளிய அலைகள்
நரை தட்டாத மலைகள்
வியப்போடு என்னை பார்ப்பதாய்
பெருமிதம் பொங்க போகிறேன் !
இரவு வேளை
நகரும் பொழுது .....
ஊரை மறந்து
உறவை மறந்து .......
நடக்கிறேன் .......நடக்கிறேன் ...........
நதியின் பாதையில்
நானும் நடக்கிறேன் .........
என்ன வரும்? ஏது வரும்?
தெரியவில்லை!
எதற்காக இந்த பயணம்
புரியவில்லை
வாழ்க்கையைப் போலவே!
ஆனாலும் நடக்கிறேன்
அர்த்தமில்லாமலே நடக்கிறேன்
நிச்சயம் ........
விடியல் என்னோடு உறவாடும் என்று ...................