காதல் முறிவு

பவ வருடங்கள் கழித்து நண்பர்கள் ஒன்று கூடும் நாள்!
அனைவரும் சந்தோஷத்தில் திளைக்க ஒர் இதயத்தின் கண்ணீர் கவிதை இது!

கல்லூரி முடியும் முன்பு கண்டிப்பாக வருவேன் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டாள்!

மீண்டும் அவளைப் பார்க்கும் தருனம் இன்று தான் தூரத்தில் அவள்!,

பார்த்த கணத்தில் என் கண்கள் கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது!
அன்று அவளைப் பார்க்க நான் தவித்த தவிப்புகள் இன்றும் என் கண்களில்!

அன்றை விட இன்று இன்னும் அழகாகத் தான் இருக்கிறாள் விழிகளில் அதே விழி ஈர்ப்பு விசையோடு!

அவளும் நானும் நிற்கும் பேருந்து நிறுத்தம் அங்கேயே காத்துக் கொண்டிருக்கிறது எங்களுக்காக "ஏ சீக்கிரம் வாடி" என்று மீண்டும் கூற ஆசை தான் எனக்கும்!

நான் அவளை அழைத்துச் சென்ற இடங்கள் எல்லாம் மீண்டும் கேட்கிறது எப்பொழுது மீண்டும் வருவீர்கள் என்று?!
நான் என்ன பதில் சொல்வேனடி!

எனக்காக நீ எழுதிய நோட்டுகள் எல்லாம் இன்றும் பத்திரமாகத் தான் இருக்கிறது!
அதை காதல் முறிவுக்கான ஒப்பந்தம் என்று எடுத்துக் கொள்ளவா?
பதில் சொல்லடி!

அன்று தவறாக வரைந்த ஒவியத்தை அழித்தாய்!
என் நினைவுகளில் உன்னை அழிக்க வழிச் சொல்லடி?!
என் காதலியே!

அவள் நெருங்க நெருங்க உதிரம் உரையுகிரது!
என் செல்கள் சிதிலமடைகிறது!

வேண்டாமடி பெண்ணே உன் கனவனை அழைத்துக் கொண்டு இங்கிருந்து சென்று விடு!
என் கண்ணீர் சொல்லி விடப் போகிறது நான் உன் மீது கொண்ட காதலினய்!

நீ திருமணமானாலும் என் காதலியே!
-கார்த்திக் pgr

எழுதியவர் : கார்த்திக் pgr (7-Dec-12, 5:56 pm)
பார்வை : 476

மேலே