புதிய சாசனம் படைப்போம்

தனம் தந்தவர்க்கு
கட்டண தரிசனம்
மனம் வேண்டி வந்தவர்கள்
கால் கடுக்க நிற்கணும் !

இது எங்கள்
ஆலய ஆண்டவனின்
அறநிலைய சட்டம்....

தொழில் அதிபர் வந்தால்
மெத்தை போட்டு கொடுக்கனும்
தொகுதி மக்கள் வந்தால்
வாயில் கதவு முன்னே
காவல் துறையை வைத்து அடிக்கணும் !

இது எங்கள்
அமைச்சர் பெருமக்களின்
அதிகார சட்டம்....

பிச்சைக்காரர்களை
ஒழிப்போம் என்று சொல்லனும்
இலவசம் கொடுத்து
மக்களை எப்பொழுதும்
பிச்சைக்காரர்களாகவே நடத்தனும் !

இது எங்கள்
அரசியல் கட்சிகளின்
தேர்தல் நேர சட்டம் ....

மது
நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு
என்று எழுதனும்

குடியானவனை
மனைவி தாலியை
அறுத்துட்டு வந்து குடியென
கூவி அழைக்கனும் !

இது எங்கள்
டாஸ்மாக் பொருளாதார சட்டம்....

கடைசியில்
ஆட்சியாளர்களின் சாதனைகள்
மக்கள் பணத்தில்
விளம்பரமாய் ஜொலிக்கும்
செய்தி தாளில்....

எல்லா உரிமையையும்
ஏமாற்றி பறித்து விட்டு
மனித உரிமைகள் காப்போம்
என்று மாணவர்களை வைத்து
உருப்படியாய்
பேரணிகள் மட்டும்
ஊர் தோறும் வீதிகளில்....

இனியேனும்
நம் மனித உரிமைகளை
பிணைத்து நிற்கும்
போலி சங்கிலிகளை உடைப்போம் !

மனிதருக்காய் உலகம் காக்கும்
புதிய சாசனம் படைப்போம் !!!

எழுதியவர் : க .கார்த்தீசன் (10-Dec-12, 10:39 pm)
சேர்த்தது : kartheesan
பார்வை : 139

மேலே