உங்கள் கவனத்திற்கு

போன வாரம் தினசரியில் கண்ட அவலம். ஐந்து வயது சிறுமி பள்ளி பேருந்து நடத்துனரால் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கபட்டுளாள். அதனை அடுத்து எல்லா பள்ளியும் இப்போது ஒரு பெண் நடத்துனர் அனுப்புவோம் என்றுள்ளனர்.

நான் சில வருடங்களுக்கு முன் படித்த கட்டுரையில் இருந்து சில விசயங்களை சொல்ல விளைகிறேன். அந்த கட்டுரை நாம் எப்படி இப்படி பட்ட விசயங்களில் இருந்து நம் குழந்தைகளை காத்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.

முதலில் நம் குழந்தைகளுக்கு எது நல்ல தொடுதல், கேட்ட தொடுதல் என்று சொல்லி தர வேண்டும்.

குழந்தை திடீரென்று எப்போதும் போல் இல்லை என்றால் அவர்களை திட்டாமல், என்னவென்று பரிவுடன் கேட்க வேண்டும். இல்லையென்றால் அவர்களிடம் நம்பிக்கையை வளர்த்து நம்மிடம் சொல்ல சொல்ல வேண்டும்.

குழந்தை யாராவது வீட்டிற்கு செல்ல மறுக்கிறது என்றால் என்னவென்று கொஞ்சம் பொறுமையுடன் கேட்டு பழக வேண்டும். அதை விடுத்து அவள் அப்படித்தானே எப்போதும் ரகளை பண்ணுவாள், என்று எண்ண கூடாது. ஏனென்றால் அங்கே யாராவது பிள்ளையிடம் தப்பாக நடந்திருக்கலாம். அவர் நமக்கு தெரிந்தவராக இருக்கும், ஆனால் இந்த காலத்தில் எதுவும் சொல்ல முடியாது.

பத்து நாட்களுக்கு முன் தினசரியில் வந்தது, தாத்தாவே பேர குழந்தையை இந்த கொடுமைக்கு ஆளாக்கியது, அதுவும் பாட்டிக்கும் தெரிந்து. பாவம் அந்த குழந்தையின் அம்மா, போலீசில் புகார் கூறி, குடும்பத்திடம் இருந்து விலகி, இப்போது மருத்துவரின் சிகிச்சையில் இருக்கிறது குழந்தை.

குழந்தைகளுக்கு எந்தெந்த பாகத்தை எப்படி மற்றவர் தொட்டால் தவறு என்று கொஞ்சம் புரியும் படி சொல்ல வேண்டும்.

குழந்தைகள் இந்த விசயத்தில் சந்தேகம் கேட்டால் கொஞ்சம் அவர்களுக்கு புரியும் வகையில் சொல்லி தார வேண்டும்.

எழுதியவர் : ஜெயந்தி (11-Dec-12, 10:35 am)
பார்வை : 198

மேலே