பெரிய மனுசி..

" அம்மா..இன்னைக்கு , ஸ்கூல் இருக்கம்மா?
எழுந்தவுடன் கேட்டாள் யாழினி.
" இன்னைக்கு ஒரு நாள் தன ஸ்கூல் நாளைக்கு லீவ் " என்று தன் 4 வயது மகளுக்கு பதில் உரைத்தாள் லீலா. சந்தோசமாக கிளம்பி பள்ளிக்குச் சென்றாள் யாழினி.
மாலை பள்ளி முடிந்து வருகையில் மிகவும் சோகமாக இருந்தாள். " என்னடா தங்கம்..என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்க? என்ற அம்மாவிடம் " அம்மா எனக்கு ... எனத் தயங்கினாள் யாழினி.
"என்னம்மா சொல்லு" என்றாள் அம்மா.
"எனக்கு சாக்லேட் வேணும்மா..என்ற உடன் சிரித்தபடி லீலா சாக்லேட் கொடுத்தாள். சாக்லேட் ஐ கையில் வாங்கிய மறு நொடி வீட்டிற்கு வெளியே வந்த யாழினி , அங்கே பறந்தபடி இருந்த சிட்டுக் குருவிகளுக்கு சாக்லேட் ஐ உடைத்து வீசினாள்.
"யாழினி , என்ன பண்ற? சாக்லேட் ஐ குருவி சாப்பிடாது..என்ற அம்மாவை ஆழமாக பார்த்தபடி யாழினி கேட்டாள் " நீ எப்போ அம்மா குருவிக்கு சாக்லேட் கொடுத்த? நீ அரிசி மட்டும் தான கொடுக்கற? நேத்து நான் சாக்லேட் சாப்பிடும் போது இந்த குருவி பாவமா பாத்துச்சு, அதன் இன்னைக்கு மறக்காம இருக்கணும்னு என் ஹோமே வொர்க் நோட் ல குருவி படம் போட்டு வச்சேன் அதுக்கு பிரபா மிஸ் என்ன திட்டிட்டாங்க, என்ற யாழினியை அள்ளி எடுத்து முத்தமிட்டாள் லீலா.

எழுதியவர் : பிரியா பேபி (13-Dec-12, 2:00 pm)
பார்வை : 356

மேலே