சூடித் தந்த சுடர்க்கொடியாள்.....!

என்வீட்டுத்
தோட்டத்தில் பூரிக்கிறது...,
பூஜைக்கு பிறப்பித்த பூக்களோடு
தோழமையுடன் முல்லைக்கொடிகள்..!

பக்கத்திலோ
பக்தி மணம் வீச....,
பவ்வியமாய் அசைந்தாடும்
பச்சைநிற துளசியின் நர்த்தனம்...!

நெஞ்சமெல்லாம்
நெகிழ்ச்சியோடு ஆவலாய்..,
மாலைக்குத் தேவையானவற்றை
பதமாய் கொய்தெடுத்துக் கொண்டு..,

அழகாய்க்
கூறுகட்டி தனித்தனியே..,
நாரெடுத்து நல்லவிதமாய்
நானதனைத் தொடுத்திருக்க ..,

உள்ளங்கை
உறையுள் ஏற்று
உலர்கின்ற ஈரத்தோடு...,
உள்ளம் உறைந்த இறையின்..,

தோளில்
சேர்ந்திடும் எண்ணமுடன்..,
பரவசம் எனக்குள் பரப்பியபடி
பக்குவமாய் சுருண்டபடி நீளும் ...!

ஆராதனைக்கு இனி
ஆயத்தமாகிக்கொள்ளும்
நான் சூடித் தந்த சுடர்க்கொடியாள்...,
நாளெல்லாம் இது நித்தியக் கடமை...!

எழுதியவர் : புலமி (15-Dec-12, 8:59 pm)
பார்வை : 136

மேலே