என்ன சாதிக்க போகிறாய் நீ !
வாழ்க்கையையே கடமையாக
வாழுந்து செல்லும் மனிதர்கள் கூட்டம் ,
மனிதனை அச்சிட (டை) ஓர் கூட்டம்
அதை அழிக்க ஒரு கூட்டம் ,
என்ன சாதிக்க போகிறாய் நீ !
இயந்திர வாழ்க்கையில்
இயந்திரமாய் போன மக்களின் எண்ணங்கள்
காலையில் எழுப்புவதற்கு கடிகாரம் ,
குளிக்கும் நீர் கொதிக்க வைக்க ஹீட்டர் ,
காப்பிக்கும் டிபனுக்கும் மின்சார அடுப்பு,
வேகமாய் சென்று வர விரைவு வாகனம்
கணக்குகளை பதிந்துவைக்க கம்ப்யூட்டர் ,
இரவினில் தூக்கம் வர தூக்க மாத்திரை
எங்கே போனது அமைதி , அன்பு, நிம்மதி ,
என்ன சாதிக்க போகிறாய் நீ !
பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் முகாமிட்டு விட்டு
பிள்ளைகள் ஹாஸ்டலில் அலைகிறார்கள் அனாதைகளாய்
"லட்சியம்" என சொலிக்கொண்டு
"அலட்சியம்" செய்கிறாயே மனித உயிர்களை
என்ன சாதிக்க போகிறாய் நீ !
மனிதர்களாக இருக்கும்போது மதிப்பு தெரியவில்லை
மாண்டு போன பிறகு ஆகிறார்கள் அவர்கள் "கடவுளாய் "
காட்டப்படுகிறது தினம் தினம் அவர்களுக்கு கற்பூரமும் வத்தியும்
என்ன சாதிக்க போகிறாய் நீ !
பணத்தை சம்பாதிக்க
பந்தய குதிரைகளாக ஓடிக்கொண்டிருக்கிறாய் இடைவெளியில் உணவு ,
இரவு உறக்கம் மட்டும் கேள்விக்குறியாய்
என்ன சாதிக்க போகிறாய் நீ !!
இருபத்திநான்கு மணிநேரமும் கணினியை கட்டிக்கொண்டிருக்க
இயந்திரத்தின் "மெமரி" கூடிக்கொண்டிருக்கு
மனிதனின் நினைவாற்றலை இழந்துவிட்டாயே
எவ்வளவு சாதுரியமாய் ,
என்ன சாதிக்க போகிறாய் நீ !
காக்கைக்கும் குருவிக்கும் இருக்கும்
கருணை கூட உனக்கில்லை மனிதா,
ஆம் ,விபத்து நடந்து சாக கிடக்கும் சக மனிதனை
வேடிக்கைபார்த்து கடந்து செல்கிறாய்
இன்று இவர் , நாளை உனக்கென்றால் ?
என்ன சாதிக்க போகிறாய் நீ !
வங்கி சேமிப்பை உயர்த்த நினைத்து
வாழ்க்கையை சேமிக்க மறந்தவர்கள் எத்தனையோ பேர்
உங்களை எண்ணிக்கையில் சொல்ல முடியாது ,
என்ன சாதிக்க போகிறாய் நீ !
ஆசைகளும் தேவைகளும் அதிகரித்துக்கொண்டாய்
நிம்மதியும் சந்தோசமும் சுருக்கிவிட்டாய்
இன்று ஒரு படி ,நாளை இன்னொருபடி
இப்படியாய் "திருப்தி" இல்லாமல்
"தீயாய்" எரிந்து அணைந்துகொண்டு கொண்டிருக்கிறாயே மனிதா ,
என்ன சாதிக்க போகிறாய் நீ !
உன் குழந்தைக்கு கிடைக்க வேண்டிய
அரவணைப்பு ,அன்பு , ஸ்பரிசத்தை கூட
விலைக்கு கொடுக்கிறாள் "வேலைக்காரி "
வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை நடத்திக்கொல்கிறாய் அறிமுகம் ,
என்ன சாதிக்க போகிறாய் நீ !
விலங்குகள் கூட பேணி வளர்க்கிறது பிள்ளைகளை
மனிதனோ நீ ?
இந்த இயந்திர வாழ்க்கையில் நீ மட்டும் கெட்டது என்று
இதோ இன்னும் நடத்திக்கொண்டிருக்கிறாய் போதனை
கருவில் இருக்கும் குழந்தைக்கு
நீ வரும் கால டாக்டர் ,
நீ வரும் கால என்ஜீனியர் ,
நீ வரும் கால வக்கீல் ,
என்ன சாதிக்க போகிறாய் நீ ?
இயந்திரமாய் இயந்திரத்தோடு வாழ்ந்தது போதும்
இனியாவது மனிதனோடு மனிதனாக வாழ் !