டெல்லி பஸ்ஸில் கற்பழிக்கப்பட்ட மாணவி ..! தூக்குத் தண்டனை என்று சொல்லி தப்பிக்கும் மதவாதிகள் மற்றும் இந்துத்துவவாதிகள்..!
ஒவ்வொரு முறையும் பெரியார் எவ்வளவு பெரியார், இந்த வெறியர்கள் எவ்வளவு காட்டுமிராண்டிகள் என்று காட்ட ஒரு பெண் பாதிக்கப்படவேண்டியிருக்கிறதுதான் பெரிய சோகம் !
"இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆண் நண்பனுடன் ஊர் சுற்றிக்கொண்டிருந்த பெண்ணுக்கு பாடம் கற்பிக்கவே அவளை வன்புணர்வு செய்தோம்" - மாணவியை தன் தம்பி மற்றும் இன்னும் மூவருடன் சேர்ந்து வன்புணர்வு செய்த டெல்லி பேருந்து ஓட்டுனர் ராம்சிங் வாக்குமூலம்.
இதில் இருந்து என்ன தெரிகிறதென்றால்,
1) ஒரு பெண்ணை, தன் உடன்பிறந்ததம்பியுடன் சேர்ந்து புணரலாம், ஏனெனில் அது மகாபாரதத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆக அது தப்பில்லை, கலாச்சார சீரழிவு இல்லை.
2)குழந்தைகள் செல்லும் பேருந்தில் தம்பி மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கும்பலாக தண்ணி அடித்துக்கொண்டே ஊர்சுற்றலாம். ஏனெனில் சோமபானம் நம் புராணங்களில் கடவுள்கள் பயன்படுத்திய ஒன்று. ஆக அதுவும் தப்பில்லை, குற்றமுமில்லை!
3) மாணவியையும், காப்பாற்ற வந்த நண்பனையும் கம்பியால் தாக்கலாம். ஏனெனில் ஆயுதம் தாங்கிய கடவுள்கள் நீதியை நிலைநாட்ட எடுக்கும் வழிமுறை அது. ஆக அதுவும் தப்பில்லை, வன்முறை இல்லை!
4)ஆனால் ஒரு பெண் ஆண் நண்பனுடன் இரவில் வெளியில் செல்லக் கூடாது. ஏனெனில் அது நம் புராணங்களில் வரும் படிதாண்டா பத்தினிகளின் வாழ்க்கைமுறையின் படி தவறு, கலாச்சார சீரழிவு. அதுமட்டுமல்லாமல் ஆர்.எஸ்.எஸ், சிவசேனா, வி.எச்.பி போன்ற இந்துமத கலாச்சார காவலர்களுக்கு கோபம் வரவழைக்கும் செயல். அதனால் அது மிகப் பெரிய தவறு.
ஆக பெண்களுக்குப் பாடம் கற்பிக்கிறேன் பேர்வழி என கிளம்பியிருக்கும் ராம்சிங்க் போன்ற கிறுக்கர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ், சிவசேனா போன்ற ஃபாசிச இயக்கங்களை தடை செய்யவில்லையென்றால் பெண்கள் இந்தியாவில் நிம்மதியாக நடமாட முடியாது!
பெண்கள் புத்தாண்டு கொண்டாடக் கூடாது, பெண்கள் குடிக்கக் கூடாது, பெண்கள் காதலிக்க கூடாது, ஜீன்ஸ் அணியக் கூடாது என பெண்களுக்குத் தடை போடும் இந்துமதவாதமானாலும் சரி, பீர் குடித்ததற்காக பெண்ணுக்கு மரணதண்டனை அளிக்கும் இஸ்லாம் மதவாதமானாலும் சரி, முற்றிலும் அழிக்கப்படவேண்டியதே!
பெண்களும் ஆண்களும் தனித்தனி உயிரினங்களாக அல்லாது மனித இனமாக ஒன்றாக வளர முடிந்த, இயங்க முடிந்த ஒரு சமுதாயமாக இந்தியா மாறும் வரை, அதற்கு தடையாக இருக்கும் கலாச்சாரம், மயிறு, மட்டை போன்ற கிறுக்குத்தனங்கள் களையப்படும்வரை இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. சிங்கத்தின் குகையில் வாழும் முயல்களாகத்தான் பெண்கள் வாழ வேண்டியதிருக்கும்!
நன்றி
ஓசை செல்லா