புரியாத ஜென்மங்கள்

ஒருவிதமான பயத்துடனேயே வண்டியில் ஏறியமர்ந்தாள் அவள். அவன் இங்கும் வந்திடக்கூடாது என்று கடவுளை வேண்டிக்கொண்டதில் பலன் இருக்கப்போவதில்லை என்பதை உணராமலே. சரியாகப் பதினொன்னுக்கு வந்தேவிட்டான். அவளை தேடிக்கொண்டே அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்ததை உணர்ந்துகொண்டு, அப்படியே பம்மிக்கொண்டு போர்வையினை மூடிக்கொண்டு தன்னை மறைத்துக்கொண்டாள். இரவு ஓடிக்கொண்டிருந்தது, வண்டியுடன் சேர்ந்து. மணி 4. தூக்கம் வரவில்லை. கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தாள் கண்ணில் பட்டுவிடக்கூடாதேன்று. சட்டென என்னருகில் வந்து தேடினான். என்னைப்பார்க்கிறான், கண்டுபிடித்துவிட்டான். எத்தனை உரைப்பினும் ஜென்மத்திற்கு புரியவைக்க முடியவில்லை. கைகளைவேறு ஆட்டி, வந்துவிட்டதை உணர்த்தினான். சட்டென என்னை வருமாறு அழைத்தான். நான் அவனைக் கண்டுகொல்லாததுபோல், தூங்கவதுபோல் படுத்திருந்தேன். பலமுறை திரும்பத்திரும்ப வந்து தொந்தரவு செய்தான். என்மனம் கோபத்தில் கொப்பளித்தது. அப்படியே அழுந்து அடித்துத் துரத்திடலாமா என்றுகூட நினைத்தேன். ஆனால் நான் அசைந்துகொடுக்கவில்லை. மணி 5. அருகில் எல்லோரும் எழுவது தெரிந்தது. அவனை அதன்பின் காணவில்லை. பயந்துவிட்டான்போலும். புரியாத ஜென்மங்கள், எத்தனைமுறைதான் சொல்வது. அறிவே இருக்காதா இந்த ஜென்மங்களுக்கு என்று மனதில் திட்டிக்கொண்டே வண்டியிலிருந்து இறங்கினால் அவள்.

எழுதியவர் : தீ (20-Dec-12, 9:01 am)
பார்வை : 343

மேலே