பேருந்து
தினசரி செல்லும் அந்த பேருந்தில் முதியவர் & ஊனமுற்றோர் இருக்கையில் வேற சில கல்லுரி மாணவர்கள் அமர்ந்து இருப்பார்கள் . அவர்களை எழுப்பிவிட்டு இந்த முதியவர் அமர்து கொள்வார். அதே போல பேருந்து வந்து நின்றது . இவர் பேருந்தில் ஏறியதும் குறிப்பிட்ட இடத்தை நோக்கி சென்றார். அங்கு ஒரு இளம் வயது மாணவன் அமர்து இருந்தான். அவன் அருகில் சென்று அந்த இருக்கை மேல் எழுதி இருந்த அந்த ( முதியவர் & ஊனமுற்றோர் மட்டும் ) வக்கியத்தய் சுட்டி காட்டி எந்திரிக்கும் மாறு வினவினார். அந்த மாணவரோ அவருக்கு எந்திரித்து வழிவிட்டார் . அதைக்கண்டு மனம் உடைந்த அந்த பெரியவர் தயவு செய்து நீங்கள் உக்காரும் மறுக் கேட்டுக்கொண்டார் . அதை மறுத்த அந்த மாணவர் தன்னுடைய நிறுத்தம் (stop) அருகில் இருப்பதாக குறிப்பிட்டார். அந்த மாணவர் இறங்கும் வரையில் அவரை பார்த்து புன்னகத்தவரே இருந்தார் அந்த பெரியவர்.