..........கல்லெறிந்த வனம்...........

காற்றுக்கு அசையும் தாவர உணர்ச்சிகள்,
கலையாமல் தலையாட்டும் அசையும் கிளை உணர்வுகள்,
அடங்கிக்கிடக்கும் ஆத்திரமாய் புல் மண்டிக்கிடக்கும் புதர்கள்,
குலுங்கிச்சிரிக்கும் சிங்காரமாய் வனத்த வண்ணத்து மலர்கள்,
ஏங்கிக்கிடக்கும் ஆசைகளாய் படர்ந்து உயரும் கொடிகள்,
எல்லாமே இருந்தும் தவித்துக்கிடக்கும் சலசலப்பாய் நிராசைகள்,
என்றாலும் வீசமறுத்த காற்று உனக்காய் ஏங்கிக்கிடக்கும் நான் ?
"நீ சொல்லெறிந்த வனம்"

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (20-Dec-12, 7:14 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 122

மேலே