21.12.2012 ல் உலகம் அழிஞ்சதால...இது ஆவிக் கவிதை....
இன்னைக்கு காலையில
உலகம் அழிஞ்சிச்சா
கொத்துக் கொத்தா உசுரெல்லாம்
மேலோகம் போனுச்சா
அங்க போனா சாமியெல்லாம்
தனித்தனியா நின்னுச்சா
அதுங்க ஆளுகளெல்லாம்
அடயாளம் பாத்துப் பாத்து
அதுக அதுக உசிரயெல்லாம்
தனித்தனியா பிரிச்சிச்சா
போட்ட உசிரு
ஒன்னுக்கு பத்தா பெருகுனதுல
சாமிகளெல்லாம் சந்தோசமானுச்சா
பாவ கணக்க எடுத்து வச்சி
நல்ல உசுரு......கெட்ட உசுருனு
கணெக்கெடுப்பு நடந்துச்சா
சூடான எண்ணச் சட்டியில
கெட்ட உசுர பொட்டுச்சா
நல்ல உசுர எடுத்துக்கிட்டு
தனித்தனியா நடைய கட்டுச்சா
உலகந்தான் அழிஞ்சி போச்சே சாமிகளா
அந்த உசிரெடுத்து போவதெங்கே
சொல்லுவீங்களா?
பொறந்த பின்னே சாமிய மாத்துன
உசுருக்கெல்லாம்
கணக்கு வழக்கு கண கச்சிதம்
எப்படினுதான் புரியலயே
என்னப் போல கொஞ்சப் பேர
எந்த சாமியும் கண்டுக்கலயே
அப்ப...
எங்கள படச்சதுதான் யாருன்னு
உசுரோட இதப்படிக்கிற
நீங்களாவது சொல்லுங்களேன்...