ஒரு நாள் கடவுள்

கத்தும் கடலின் அழகினைப் பருகி
சத்தம் பிறயேதும் இலாதது கண்டு
பத்து நிமிடமே உறங்கி இருப்பேன்
சொத்தென யாரோ தோளைத் தொட்டார்.

ஒரு நாள் நீயிந்த உலகினைக் காக்க
கருவாம் இந்தச் சக்கரம் கைக் கொள்
உருவம் ஏதும் இல்லாத நானே
தருக்கித் திரிவோர்க்குத் தெரியா கடவுள்

”எத்தனை நேரம் பிடித்து வைக்கணும்
எவ்வளவு ஊதியம் கிடைக்கும் அதற்கு
மதிய உணவிற்கும் பானம் அருந்தவும்
இடையில் செல்ல அனுமதி உண்டா”?

கொடுத்த அந்தச் சிறிய சக்கரம்
வெடுக்கெனப் பிடுங்கி கூறினர் கடவுள்
”அடக்கம் இலாத ஆணே நீ இன்று
ஆண்டவன் ஆகிடும் தகுதி இல்லை”

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (24-Dec-12, 1:07 pm)
சேர்த்தது : T. Joseph Julius
Tanglish : oru naal kadavul
பார்வை : 116

மேலே