வேலன் தான் காலனா கரிகாலனா ?

காத்திட வேண்டியே
வேலா !காலடியில் வாடா என்றேன்
காலனை அந்த
வேலன் தான் அனுப்பினானோ ! இல்லை
காலா !கரிகாலா! என்று தேடினானோ !
வீழாதவனை மண்ணில் வீழ்த்தினானோ ?
வேலன் காலனாய் தன்பெயர் மாற்றினானோ !
தமிழன் கண்ணீர் குடித்தானோ,ருசித்தானோ !
இல்லை இது சதிதானோ !


தமிழா!
நீயும் நம்பிட
தனியே இருந்து அலறிட
உண்மை ஏதும் உள்ளதுவோ ?
உலகம் தான் அதை மறைத்ததுவோ !
இல்லை மறந்ததுவோ !

தலைவன்
தலை மறைவால்
தலைவா !என்றலறியே
தமிழர் நாம்
மீழாத் துயரில் மாழ்வோமோ ?இல்லை
தலை குனிந்து வாழ்வோமோ?

என்செய்வோம் ?
இத்தனை கேள்விகளுக்கும் எந்த
சித்தனிடமும் பதில் இல்லை
புத்தனிடமும் முடிவில்லை
ஐ நாவிடம் கூட முடிவில்லையாம்-ஆக



வேலா! காலடியில் வாடா
காலனைக் காட்டித் தாடா !
காலடியில் போட்டு நான் மிதித்திட வேண்டும்
கரிகாலன் யாரெனக் காட்டிட வேண்டும்
வேரறுக்க வந்தவனை வேறு வேறாக்கிட வேண்டும்
தமிழன் காலமெல்லாம் கண்ணீ ராறு வற்றிட வேண்டும்
நல்லதொரு நாளில்
வல்ல மாதலைவன் வந்திட வேண்டும்

வேலா!
காலனை காட்டித் தாடா ! இல்லை
தலைவனைக் கூட்டி வாடா ! அன்றேல்
இருக்கிறானா ? இல்லையா? என
சொல்லிப் போடா !
சொல்க ! அச்சொல்லை ஏற்று
எல்லாத்தமிழரும் ஓம்புக !
-----:-------------

எழுதியவர் : மன்னார் ஸ்ரீ (27-Dec-12, 5:58 pm)
சேர்த்தது : srith2020
பார்வை : 110

மேலே