தெருவோர பள்ளிக்கூடம் ""
கறுத்த உடலோடு கந்தலாடை உடுத்திக்கொண்டு
பெற்றோரும் பிள்ளைகளும் சகஜமாய்
"தெருவோரமாய் ஓர் கூட்டம் "!
ஆசைக்கு அடிமைப்பட்ட உலகத்தில்
"காரும் பங்கலாவுமாய் , கல்லா நிறைந்திருந்தும் "
போதுமென்ற மனமில்லாமல் தினமும் எதையோ தேடிக்கொண்டிருக்கும் உலகத்தில் !
ஊரெல்லாம் இவர்களின் வீடு
ஒற்றை மூட்டையிலே இவர்களின் உடைமை !
அறுசுவை உணவுக்கு பஞ்சமில்லை இங்கு
"அய்யர் வீட்டு ரசமும் "
"செட்டியார் வீட்டு சாம்பாரும் "
"பாய் வீட்டு பிரியாணியும் ஒன்றாய்"
"சங்கமிக்கிறது "இவர்களின் ஓட்டை தட்டில் !
"மிச்சங்களை உண்டு வாழும் மிச்சங்கள் என்பதால்"
சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு
சாலையோரம் வாழ்பவர்கள்,
தனிக்குடும்ப கலாச்சாரத்தில்
கூட்டு குடும்பமாய் வாழும் ஒரே மக்களினம்!
வேகமாய் பயணிக்கும் உலக பயணத்தில்
இவர்களுக்கென இருப்பது "ரிக் ஷாவும்" "தட்டுவண்டியும்தான் "!
"பேராசை உலகத்தில்" பெற்றதும் பத்தாமல்
இன்னும் வேண்டுமென்று ,"கட்டிலில் புரண்டும் கண்ணுறக்கம் இல்லாமல் "மாத்திரையில் மயங்கிக்கிடக்கும்
மாய உலகத்தில் ,
கொசுக்கடியிலும் சுகமாய்
சொப்பனம் காண்கிறது ஏழைக்கூட்டம்!
ஒரு நாள் "MGR பாட்டும் "
மறுநாள் சிவாஜி நாடகமும்
நாளெல்லாம் மகிழ்ச்சி கூத்தில்
மூழ்கி கலைக்கிறது இந்த கூட்டம் !
மழை பெய்தால் என்ன, பெய்யாவிட்டால் என்ன
கௌரவத்திற்காக கடன் பட்டு வாழும் மக்கள் மத்தியில்
கைநீட்டி பிச்சை கேட்கும் கௌரவக்காரர்கள் !
ஓய்வில்லாமல் ஓயாமல் அலையும் உலத்தில்
இருப்பது போதுமென்று இன்னொன்றை தேடாமல்
சமத்துவமாய் வாழ்ந்து மடிந்து நமக்கு
ஓர் நல்ல பாடம் புகட்டுகிறது இந்த மக்களின்
"சாலையோர பள்ளிக்கூடம் "!