தானம்

வெட்கத்தில் எனை அணைக்கும் கண் இமையாய் நீ ..
உன் அணைப்பில் மயங்கும் கரு விழியாய் நான் ..

ஊடலில் எனை பிரியும் கீழ் உதடாய் நீ ..
முத்தங்களுடன் உனக்காய் காத்திருக்கும் மேல் உதடாய் நான் ..

என்னை இயக்கும் உயிர் மூச்சாய் நீ ..
உன் நினைவில் துடிக்கும் இதய துடிப்பாய் நான் ..

நான் உறங்க உன் மடி தந்து பழக்கியவள் நீ ..
இன்று கல்லறையின் மடியில் உறங்க செல்கிறேன்
கவலை ஏதும் இல்லாமல் ...

ஏன் தெரியுமா ?

உன்னை பிரிந்தது என் உயிர் மட்டுமே ..
உடல் உறுப்பு அல்லவே ..

தானம் செய்வோம் உடல் உருபுகளை ..

எழுதியவர் : கவின் அன்பு (29-Dec-12, 3:36 pm)
சேர்த்தது : kavinanbu
Tanglish : thaanam
பார்வை : 144

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே