என் அன்பே....
என் அன்பே...
நான் மண் என்றால்
நீ மரமாக இரு
நான் இல்லாமல்
உன் ஆயுள் இல்லை
நான் ஆகாயம் என்றால்
நீ நிலவாக இரு
நான் இருந்தால் மட்டுமே
நீ ஒளிர முடியும்
நீ நகமென்றால்
நான் சதை நீ பிரிய நினைத்தால்
வலி எனக்கு தான்
நான் கடலென்றால்
அதில் வாழும் மீனாய் இரு
நான் இல்லையென்றால் நீ இல்லை நாணயத்தின் ஒரு பக்கம் நான் மறுபக்கம் நீ
ஒரு பக்கம் இல்லையென்றால் நாணயம் செல்லாது
மொத்தத்தில் நான் உடல் நீ உயிர் உன்னை பிரிந்து என்னால் வாழமுடியாது...