உமருக்கொரு உத்தி சொல்வேன்...

நேற்று
சத்தியம் செய்ததற்காய்
மது கோப்பைகளை உடைத்தேன்..
இன்று மது கோப்பைகளுக்காக
சத்தியத்தை உடைக்கின்றேன்
சொன்னது உமர் கய்யாம்....
அவசரப் பட்டுவிட்டாய் உமர்!!
இரண்டையும் உடைக்காமலிருக்க
உத்தி இருக்கிறது என்னிடம்..
முதலாவது பொய்சத்தியம்!!
இரண்டாவது எங்களூர் நெகிழிக்குவளை ...
கோபப் படாதே ...
தவறு உன்னுடையதல்ல!!...
எல்லாம் விஞ்ஞானம் செய்த வினோதம்..
அருகி வரும் சத்தியங்களும்,
பெருகிவரும் நெகிழிப் பயன்பாடும்..

எழுதியவர் : (30-Dec-12, 12:21 am)
பார்வை : 152

மேலே