தலை நிறைய பூ வைத்து...

தண்ணீர் குடம் ஏந்தி
தலை கவிழ்ந்து வரும்
தங்கை போன்றவள்.....

வயல்காட்டில் வேலை செய்து
வீட்டில் சமையல் செய்யும்
தாய் போன்றவள்....

கை நிறைய வளையல் போட்டு
தலை நிறைய பூ வைத்து
வளைய வரும்
பக்கத்து வீட்டுக்காரி போன்றவள்....

இப்படியாக
எல்லா பக்கங்களிலும் பெண் இருப்பாள்....

ஆனால்
நினைத்த நேரம் எல்லாம்
விருப்பமில்லை என்றாலும்,
உறவுக்கு இழுக்கும்
மிருகம் போல
எல்லா பக்கங்களிலும் ஆண் இருந்தால்
அந்த பெண் எந்த பக்கம் போவாள்?.....

இதற்கு தீர்வு
வன்கொடுமையான
சாவுதானா?

அப்படியே அவள்
உயிர் பிழைத்தாலும்
கேள்வி கணைகளால்
தின்றெடுக்கும் நீதிமன்றமும்,
துரத்தி பிடிக்கும்
பத்திரிக்கை உலகமும்,
வாழ விட்டு விடுமா?

எழுதியவர் : சாந்தி (29-Dec-12, 11:02 pm)
பார்வை : 179

மேலே