அவள்
அவள் தலை பின்னலில் இருந்து தொடங்குகிறது பொறுப்புகள் ...
ஆயிரம் முடிகளில் விழும் ஆயிரம் சிக்குகளை தாண்டி கொண்டு
அழகாய் அவள் இடும் பின்னல் சொல்லும் ஆயிரம் பொறுப்புகள் ....
காலையில் கதிரவனோடு எழும்பி விடும் அவள் கண்கள் ,
இரவு நிலவு வந்து தூங்க வைத்தால் ஒழிய மூடுவதில்லை ...
அத்தனையும் தாங்கி கொண்டு அன்பாய் அவள் ஊட்டும் சோற்றிற்கு
எத்தனை எடை போட்டாலும் ஈடாகாது ...
உள்ளே ஒரு வலி வந்தால் உணர்த்த மாட்டாள் ..
வெளியில் எவர் வலி கண்டால் துடித்து எழுவாள் ..
மனம் நிறைய பாரம் இருந்தும்
சினம் கொள்ள யோசிப்பாள்..
இதழ் நிறைய சிரிப்பை தந்து
உறவுகளை தாங்குவாள் ...
கண்ணீர் வழியே காயம் தீர்ப்பாள்
வெகுளித்தனம் இது ..
காயம் தந்தாலும் பூட்டி கொள்வாள்
பெருந்தன்மை இது ...
எழுத தொடங்கினால்
எழுதி கொண்டே போகலாம் ..
ஏனென்றால் இருட்டறையில் தொடங்கி
வாழ்வின் ஒரு ஒரு அறையிலும் பெண்மையை கடந்து செல்கிறோம் ...
அவள் கேட்பது சிலைகள் அல்ல ...
சுதந்திரம் மட்டுமே ...
உணர்ந்து கொள்ளுங்கள் உள்ளங்களே .....