நேர்த்தி எனும் கவிதை

இறையோ,
இயற்கையோ,
படைத்த
நேர்த்தியானவைகளும்
நேசிக்கப்படுபவைகளும்
இரசிக்கப் படுபவைகளும்
நேர்த்தியாக செய்யப் பட்டவைகளும்
நேசிக்கவென்றே உருவாக்கப் பெற்றவைகளும்,
இரசிக்கவென்றே தோற்றுவிக்கப் பட்டவைகளும்,
அனுபவமாகி
காட்சிகளாக விரியும் போதுதான்
கவிதைகளாய்ப்
பிறப்பெடுக்கிறது.