குளிர் கால மடல்
குளிர் கால மடல்!
பனி ஊசி நூல் எடுத்து
மனசை தைத்தேன்....
குளிர் போர்வை யதை போர்த்தி
உடலை வைத்தேன்...
தீக் குச்சி நெருப்பினிலே
குளிரும் காய்ந்தேன்...
மழை பெய்து அதை அணைத்தால்
நினைப்பில் நொந்தேன்...
ஆதவனை யுனை யழைத்து
மடலும் வரைந்தேன்...
வா ஆதவா...!!!