யார் அது?

கதவு தட்டப்பட்டவுடன் உள்ளிருந்து
குரல் கேட்டது ''யார் அது?''
பதில் வரும்முன் தொடர்ந்த குரல்
''எதை விற்றாலும் வேண்டாம்"
சில நொடிகள் கழித்து
''நன்கொடையெல்லாம் கிடையாது'' என்ற குரல்
எச்சரித்தது''இனி இப்படி தட்ட வேண்டாம்''
முத்தாய்ப்பாக ஒலித்த குரல்
'' ஆமா! உன் பெயர் என்ன?"
தெளிவான குரலில் பதில் வந்தது
''என் பெயர் காற்று;
பார்த்துவிட்டு செல்ல வந்தேன்''
நகரத்து அடுக்கக வீட்டின்
கதவு இறுக்கமாக மூடியிருந்தது.

எழுதியவர் : சாய்ஸ்ரீ (2-Jan-13, 4:30 pm)
சேர்த்தது : saisri2912
பார்வை : 127

மேலே