புன்னகை மீண்டும் வேண்டும்

நிறம் இல்லாது நான்
நீல ஆடை சூடி,
நிலத்தில் நடைபோட......
வானவள் அழைக்க
மேகமாய் உருமாறி
கருமையோடு கண்விழித்தேன்......
சிதறி விழுகிறேன் ,
மழையாய் மண்ணில் இப்போது
உன்னால் உன்னில் ............
வண்ணங்கள் நிறைந்த பூவே
இதழ் விரித்து சிந்தும் உ(எ)ன்
புன்னகை மீண்டும் வேண்டும்..........................

எழுதியவர் : sukhanya (2-Jan-13, 9:20 pm)
பார்வை : 96

மேலே