முழுநிலவு

முகட்டில் முழுவட்ட விளக்கு
முகிலிலும் மின்னும் மஞ்சள் விளக்கு
முத்து முத்தான விண்மீன்களிடையே
முத்தத்தால் குளிர வைக்கும் ஆகாச விளக்கு.

நித்தம் நித்தம் புத்தம்புது உருவத்திலே
முத்தம் வைக்கும் பித்தம் உச்சந்தலையிலே
சுத்தம் செய்த வெண்ணிற தேகத்திலே
சித்தம் கலங்கும் ரசிக்க எண்ணயிலே.

பட்டுடுத்தி உன்னை பார்ப்பதற்கு
பட்டுபோகாமல் பூ மலர்ந்திருக்கு
தட்டிகழிக்கும் பார்வை பார்த்து
விட்டுச் செல்லாதே! வெள்ளி மலரே!

உன்னையே மணம் முடிக்கும்
வரிசையில் நிற்க இடமில்லை.
கண்ணையே திறந்து பாராமல்
மனதை நீ கொய்யாதே!

பாதுகாப்பு வளையத்தினுள்
சாதுவாக அமர்ந்த உன்னை
ஏறிட்டு நான் பார்த்தாலும்
சிவக்கவில்லை கன்னம் வெட்கத்திலே!

இமைக்காமல் உன்னை பார்த்ததிலே
கண் திருஷ்டியும் பட்டுடுச்சி
மை கொஞ்சம் வைத்திடவே
பைய நடந்து வா! வெண்மையிலே!

காதலர்கள் பலர் உன் அழகுகண்டு
அதில் பெண்களும் சிலர் இங்குண்டு
மதி மயங்கச் செய்யும் வெண்மதியே!
விதி மீறிதான் வா வானிறங்கி!

விண்ணில் ஒளி வட்டமிட
நகல் ஒன்றை அனுப்பி வைப்போம்
மண்ணில் பாதம் பட்டு விட
அகல் ஏந்தி உன்னை வரவேற்போம்!!!

எழுதியவர் : சுமி (3-Jan-13, 9:24 pm)
பார்வை : 114

மேலே