தெரியவில்லை....

பாதங்கள் நனைய
இறங்கும் வரை தெரியவில்லை
பாசியின் வலிமை

கரங்கள் நகர்ந்து
தொடும் வரை தெரியவில்லை
நெருப்பின் தன்மை

கண்கள் பனிக்க
காணும் வரை தெரியவில்லை
காட்சிகளின் பொய்மை

அலைகள் அசைய
ஆடும் வரை தெரியவில்லை
ஆழத்தின் ஆளுமை

பார்வைகள் ஒளிர
பழகிய வரை தெரியவில்லை
இருதயம் உடைவதை

ஒரு முகம் காண
ரசிக்கும் வரை தெரியவில்லை
பன்முகச் சாயலை

நம்பிக்கை சிதைய
நெஞ்சு வெடிக்கும் வரை தெரியவில்லை
துரோகத்தின் வன்மை

எழுதியவர் : ப்ரேமி (3-Jan-13, 9:19 pm)
சேர்த்தது : Premi
Tanglish : theriyavillai
பார்வை : 86

மேலே