அவைகள் அவற்றோடும்..அவைகளுக்காகவும்....நாம் ???.
மலர்கள் மகிழ்வை
காற்றுடன் பகிர்ந்திட
மறுப்பதில்லை...
காற்று சுய அனுபவங்களை
நாற்றுக்களோடு பேசிட
தயங்குவதில்லை....
நிலத்தின் வெட்கைத் தணிக்க
மழைநீர் மறுப்பதில்லை...
முகிலின் குளிர் போக்க
வெப்பம் அனுப்பாமல் நிலம்
இருப்பதில்லை...
ஒடிவரும் நதிக்காக
திசைகளை உருவாக்கிட
மண்ணிலம் மறுப்பதில்லை...
தங்குவதில்லை ஒரே இடத்தில்
ஓடை
எங்கும் மண்ணின் சங்கதிகளை
எடுத்து செல்லவேண்டுமென்பதால்...
சுயநல சூத்திரங் கொண்ட
பேராசை பட்டம் விட
மனிதன் மறப்பதில்லை...
பறக்கும் பட்டம் எதற்கும்
நல்லொழுக்க காற்றை
வானம் அளிக்காமல் இருப்பதில்லை....
அன்றியும்
அர்த்தங்கள் மட்டும்
பூமியின் நிகழ்வுகளுக்கு
அவமான கவிதைக்குள்
இருப்பதில்லை...
இன்னமும் கவிதைக்குள்
பிறந்து இருந்திட அலைகின்றன
அர்த்தங்கள்...
ஒருவேளை..
மலரிடமோ..
காற்றிடமோ ...
நாற்றிடமோ ..
நிலத்திடமோ...
நீரிடமோ...
திசைகளிடமோ.....
அர்த்தங்கள் இருக்கலாம்...
வாருங்கள் கவிஞர்களே...
தேடுவோம் -ஒன்றாய்
ஒரே எழுது கோலெடுத்து...
=========அகன்=====