ஷாஜகான் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஷாஜகான் |
இடம் | : பொள்ளாச்சி |
பிறந்த தேதி | : 12-Jun-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 75 |
புள்ளி | : 14 |
தொலைதூரம் நான் போனாலும்
உன் நினைவு நீங்கிப்போய்விடுமோ ....
உந்தன் அன்பு இல்லாமல்
எந்தன் நாட்கள் நகர்ந்திடுமோ ....
கோபம், பிரிவு வந்தாலும்
நம் காதல் மாறிப்போகாதே ...
கவலை நீ கொள்ளாதே
எந்தன் ஆருயிர் காதலியே ....
கண்டம் தாண்டிப்போனாலும்
உயிர்க்காதல் என்றும் மாறாதே ...
தடைகள் நூறு வந்தாலும்
நம் காதல் உடைத்து கரை சேரும் ...
கொட்டும் மழையினிலே
கோதை உன்னுடனே ....
அன்புக்கதைபேசி
ஆசை நடந்திடவே ....
நித்தம் கார்மேகம்
சாரல் தூவிடுதே ...
எந்தன் மனக்காட்டில்
பூக்கள் பூத்திடுதே ....
பாவை உன்னோடு
மழைக்காலம் என் மனதோடு ...
எந்தன் உயிரே உந்தன் அருகே
வாழ வேண்டும் நூறாண்டு ...
என்னை நீங்கி நீயும் நடந்தால்
நானும் போவேன் மண்ணோடு ....
பாரில் நானும் கண்டதில்லை
என்னவளே உன் போன்று...
உன்னில் நானும் என்னில் நீயும்
கலந்திருப்போம் கண்ணின் மணி போன்று ....
கடிகார முள் போல
உனைச்சுற்றி வந்திடுவேன் .....
நொடி நேரம் நீ பிரிந்தால்
மனம் நானும் வாடிடுவேன் ......
கண்ணின் இமை போல
உனை நானும் காத்திடுவேன் ......
என்னவள் நீ இன்றி
இனி என் காலம் நகராதே.....
கொட்டும் மழையினிலே
கோதை உன்னுடனே ....
அன்புக்கதைபேசி
ஆசை நடந்திடவே ....
நித்தம் கார்மேகம்
சாரல் தூவிடுதே ...
எந்தன் மனக்காட்டில்
பூக்கள் பூத்திடுதே ....
பாவை உன்னோடு
மழைக்காலம் என் மனதோடு ...
உன் இரு விழிகள் கயல்
நீ துள்ளி ஓடும் முயல் ....
காந்தவிழியாலே
கவர்ந்திழுக்கும் களவாணி ....
முத்துச்சிரிப்பாலே
எனை முழுதாய்ப்பறித்தாயே ....
உந்தன் இதழாலே
ஒரு முத்தம் தாராயோ....
தனியாய் நான் இருந்தேன்
துணையாய் வந்தாயே !!!
உந்தன் இதயம்தனில்
இடம் ஒன்று தந்தாயே !!!
என்னவள் உன்னை நான்
கண் எனக் காத்திடுவேன் !!!
மங்கை உன் கழுத்தில்
மாலை சூட்டிடுவேன் ...!!!