manjularamesh - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  manjularamesh
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-May-2016
பார்த்தவர்கள்:  57
புள்ளி:  11

என் படைப்புகள்
manjularamesh செய்திகள்
manjularamesh - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2016 10:11 pm

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

பாரினிலே நாளுமே பாவமதைச் செய்துமே
மாரியது வந்திடவும் மாதவங்கள் செய்திட்டால்
காரியமும் கைக்கூடும் காலமும் வந்திடுமோ
நேரினிலே செல்வாய் நிதம்

.கவிதையாக்கம்;இர.அர்விந்த் கார்த்திக்
S/Oமஞ்சுளாரமேஷ்
எட்டாம் வகுப்பு,
எஸ்.எஸ்.கே.வி பள்ளி,
காஞ்சிபுரம்

மேலும்

அருமை 29-Jun-2016 9:04 am
நிதர்சனம்...இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Jun-2016 5:49 am
manjularamesh - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2016 10:44 pm

இயந்திர வாழ்வை இனிமேல் தவிர்ப்போம்
இயற்கை முறையை இயம்பி டுவோமே
இயல்பை உணர்ந்தே இருப்போமே நாளும்
பயனைப் பெறுவாய்ப் பணிந்து

மேலும்

உண்மைதான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Jun-2016 6:04 am
manjularamesh - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jun-2016 7:45 pm

பஞ்சு போன்ற பாலகரை
_பண்ணை வேலை செயச்செய்தல்
நஞ்சு கக்கும் மனமுடையோர்
_நாசம் சூழ்ந்த செய்கையடா

புத்தகம் சுமக்கும் கைகளிலே
_பாரந்தனையே சுமக்கின்றார்
நித்தமும் இந்நிலை தொடர்ந்திடினே
_நிம்மதி என்பது நமக்கேதடா

பள்ளிச் செல்லும் வயதினிலே
_பணிக்கே அவருஞ் செல்கின்றார்
பள்ளிப் படிப்பைப் பாதியிலே
பறித்துக் கொள்ளும் அவலநிலையடா

ஆலை தன்னில் உழல்கின்றார்
_ஆண்டவன் செயல் இதுவென்றோ
சோலை தன்னில் விளையாடும்
_சூழல் அவர்க்கே வாய்ப்பதேதடா

குழந்தை தனையே பணிக்கனுப்பி
_குடும்பம் நடத்தும் பெற்றோரே
குழந்தை மூலம் பெறுஞ்செல்வம்
_குடும்பத் த

மேலும்

காலத்தை விற்று அடிமையான கூட்டம் தான் உலகின் மறைவில் ஏராளம் 13-Jun-2016 6:00 am
படைப்பு அருமை. எத்தனையோ இளம் சிறார்கள் பள்ளி செல்லாது வேலை செய்கின்றனர். எதிர்கால தூண்கள் அவர்கள். இப்படியே இருந்தால் எதிர்காலம்? ....வாழ்த்துக்கள் .... 12-Jun-2016 8:04 pm
manjularamesh - படைப்பு (public) அளித்துள்ளார்
27-May-2016 4:23 pm

இயற்கையான மரணமென்றாலும்
ஏனோ மனதிலொரு வேதனை
மரணமென்ற சொல்லே
மனதிற்குப் பிடிப்பதில்லை


மண்ணில் தோன்றும் மனிதரெலாம்
மறைந்துவிடுதல் இயற்கையன்றோ
எண்ணிப்பார்க்க எனதுள்ளம்
ஏனோ ஏற்கமறுக்கிறது


பாழாய்ப்போன மனிதஇனம்
சாதிப்பாசி பிடித்தே அழிகிறதே
சாதிஇனப் படுகொலைகள்
சந்ததியை அழிக்கிறதே


சாலைவிதிதனை மதியாமல்
சாலையோரம் பிணங்களாய்
இனமேகாண முடியாமல்
இருப்பதுதான் வேதனை


மரணமெப்போது வருமென்று
மண்ணில்யாருக்கும் தெரியாது
இருக்கும்வரை இயன்றதைச்செய்து
இனம்காணாப் பிணங்களாய் இல்லாமல்
இனம்காணும் பிணங்களாய் இருப்போம்
அன்பாலுலகை வெல்வோம்

மேலும்

மரணம் என்ற ஒன்றை படைத்த இறைவனிடம் அதை தாங்கும் வலிய உள்ளமும் கேட்க வேண்டும். உண்மை வரிகள். வாழ்த்துக்கள் தோழி 28-May-2016 8:25 am
மரணங்கள் வாழ்க்கையில் என்றாவது நிச்சயம் நேரக் கூடும்..அடுத்தவனை பார்த்து பொறாமை கொள்ளாத ஒன்று மரணம் தானே!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-May-2016 6:08 am
manjularamesh - manjularamesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-May-2016 1:36 pm

வாக்கினைச் சேர்த்திடு வாயே - நாளும்
வன்மையைக் கூட்டிடு வாயே - இனி
வளமேவர நலமேதரு புகழேவரு நிலையாமதில்
நடப்பாய் - துயர்
துடைப்பாய்


தாக்கிடும் தீமைகள் நீங்க - நல்ல
தன்மைகள் நம்மிடம் ஓங்க - என்றும்
தனமேவரு நிலையேதர வரமேதரு நாளாமதில்
தாழும் -தீமை
வீழும்

கவிதையாக்கம் - திருமதி.மஞ்சுளாரமேஷ்

மேலும்

உண்மைதான்...இருண்மை எனும் போக்கினை அகற்றிட எம் கையின் கரும் மை தன் விடியலை தேடித்தரும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-May-2016 6:17 am
manjularamesh - manjularamesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-May-2016 11:31 pm

வானமகள் அளித்திடும் கொடை - அதை
வாங்குவதில் நமக்கென்னத் தடை - அந்த
வஞ்சியவள் வாஞ்சையுடன் விஞ்சிநின்று வீசுகின்ற
வேளை-நல்
மாலை



தானமது மழையெனத் தரும் - மண்ணின்
தாகமதைத் தீர்த்திடவே வரும் - அந்தத்
தாயவளின் நேசமதை தூயவளின் பண்பை நீயும்
தேடு - நலம்
பாடு


கவிதையாக்கம் ; திருமதி.மஞ்சுளாரமேஷ்

மேலும்

இயற்கையுடன் நேசமாய் நடந்தால் என்றும் மழைக்கு பஞ்சமில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-May-2016 7:21 am
manjularamesh - manjularamesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-May-2016 11:54 pm

வேகத்தை தாழ்த்திடு வாயே - நீயும்
விவேகம் பெற்றிடு வாயே - நல்
விளைவேதர நலமேபெற வளமேவர விழியாமதை
வைத்திடு - நலம்
ஏத்திடு


வாகனம் ஒட்டிடும் போது - என்றும்
வைத்திடு கண்ணதன் மீது - வாழ்வில்
வளஞ்சேர்த்திட உயிர்வாழ்ந்திட நலமோங்கிட சாலையாமதில்
விழிப்பாய் - உயிர்
காப்பாய்


கவிதையாக்கம்;திருமதி.மஞ்சுளாரமேஷ்

மேலும்

அறிவுரை புகுத்தும் வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-May-2016 7:14 am
manjularamesh - manjularamesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-May-2016 12:11 am

கண்ணனை எண்ணுக நெஞ்சமே - அவன்
காலடி பற்றுக கொஞ்சமே - அந்தக்
கள்வனைப் பற்றினால் தஞ்சமே - உந்தன்
கனவேயது நனவேபெற இனிதேவர வளமேபெற
காத்திடு வானுனை நெஞ்சமே - நம்
காலமு மேமாறும் கொஞ்சமே


துன்பங்கள் என்றுமே வாழ்விலே - நம்மைத்
தூய்மையு றச்செயும் தாழ்விலே - அந்தத்
தூயவன் என்றுமே சோர்விலே - நம்
துணையேவர நலமேதர சுகமேபெற அவனேதுணை
தோழமை யைக்கொண்டு பாரிலே - நாளும்
துன்பமென் றில்லையே ஊரிலே


கவிதையாக்கம்:திருமதி.மஞ்சுளாரமேஷ்

மேலும்

சிறப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-May-2016 6:32 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

விஜய்

விஜய்

கோவை
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவரை பின்தொடர்பவர்கள் (4)

விஜய்

விஜய்

கோவை
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
சேகர்

சேகர்

Pollachi / Denmark

பிரபலமான எண்ணங்கள்

மேலே