இனம்காணா பிணங்கள்

இயற்கையான மரணமென்றாலும்
ஏனோ மனதிலொரு வேதனை
மரணமென்ற சொல்லே
மனதிற்குப் பிடிப்பதில்லை


மண்ணில் தோன்றும் மனிதரெலாம்
மறைந்துவிடுதல் இயற்கையன்றோ
எண்ணிப்பார்க்க எனதுள்ளம்
ஏனோ ஏற்கமறுக்கிறது


பாழாய்ப்போன மனிதஇனம்
சாதிப்பாசி பிடித்தே அழிகிறதே
சாதிஇனப் படுகொலைகள்
சந்ததியை அழிக்கிறதே


சாலைவிதிதனை மதியாமல்
சாலையோரம் பிணங்களாய்
இனமேகாண முடியாமல்
இருப்பதுதான் வேதனை


மரணமெப்போது வருமென்று
மண்ணில்யாருக்கும் தெரியாது
இருக்கும்வரை இயன்றதைச்செய்து
இனம்காணாப் பிணங்களாய் இல்லாமல்
இனம்காணும் பிணங்களாய் இருப்போம்
அன்பாலுலகை வெல்வோம்

எழுதியவர் : மஞ்சுளாரமேஷ் (27-May-16, 4:23 pm)
பார்வை : 74

மேலே