சா.நூருல் அமீன் - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : சா.நூருல் அமீன் |
| இடம் | : irumeni |
| பிறந்த தேதி | : 15-Mar-1993 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 30-Jul-2013 |
| பார்த்தவர்கள் | : 114 |
| புள்ளி | : 16 |
என் உணர்வுகளை கருவுற்று
என் பேனா பெற்றெடுத்த
முதல் குழந்தைக்கு
என்னை சுற்றி இருந்தவர்கள் வைத்த பெயர்
கவிதை...
அந்நாளில் இருந்து தொடங்கியது
என் குறிப்பேட்டின் பக்கங்கள் குறைய...!
மீன் பிடிக்க சென்றோம் சுட்டுகொண்றார்கள்
வெளிநாடு சென்றோம் விரட்டிஅடித்தார்கள்
சரி, வெளிமாநிலம் சென்று பிழைக்க நினைத்தோம்
கொலை செய்து குழியில் புதைத்தார்கள்
சரி நாங்கள் எங்கு சென்றுதான் பிழைப்பது? (உயிருடன்)
நிர்க்கதியாக நிற்ப்பவர்களுக்கு
வருத்தம் தெரிவிக்கவே
பல மணி நேரம் ஆகிறது இந்நாட்டில்
நீதி கிடைக்க?
ஒரு வேலை இறந்தவர்களில் ஒருவர்
அதிகாரத்தையோ
அரசியலையோ
சேர்ந்தவராக இருந்திருந்தால்
இந்நேரம் என்ன நடந்திருக்கும்
எளியவனுக்கு ஒரு நீதி
வலியவனுக்கு ஒரு நீதி
என்றா அரசியலமைப்பு இயற்றபட்டது?
நான் சட்டம் தெரியாதவன்
தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் .....
நேற்று காடுகளை அழித்து கட்டிடங்கள் கட்டியவன் நான்,
இன்று எனக்கு நா வறட்சி
ஒரு குளத்தங்கரையில் என் தாகம் தீர்த்தது பாக்கேட் தண்ணீர் ...!
நேற்று காடுகளை அழித்து கட்டிடங்கள் கட்டியவன் நான்,
இன்று எனக்கு நா வறட்சி
ஒரு குளத்தங்கரையில் என் தாகம் தீர்த்தது பாக்கேட் தண்ணீர் ...!
இது என் இரவு நேரத்து இரயில் பயணம்
இமைகளை மூடி உறங்க நினைக்கும் போது இமைகளை தட்டி எழுப்பிவிட்டு எங்கேயோ ஓடிவிடுகிறாய்,
இதுவரை என் உணர்வுகளுடன் விளையாடிய நீ,
இன்று ஏனடி! என் உறக்கத்துடன் விளையாடுகிறாய்
என்னை சுற்றி அனைவரும் உறங்க நான் மட்டும் விழித்திருக்கிறேன்
காரணமில்லாமல் இல்லை அனைத்து காரணமாய் நீ தான் இருக்கிறாய்
எல்லாம் முடிந்துவிட்டது பகலும் வந்துவிட்டது அனைவரும் விழிக்க நான் மட்டும் இமை மூடுகிறேன் கனவுகளில் உன்னை தேடி ...!