அஇலியாஸ் அகமத் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அஇலியாஸ் அகமத் |
இடம் | : வேலூர் |
பிறந்த தேதி | : 09-Aug-1999 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 212 |
புள்ளி | : 4 |
எனக்கு கவி எழுதும் திறனை இன்னும் அதிகம் தருக யா அல்லாஹ்....இயற்பியலை படித்தாலும் இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டவன்.....
கணிதத்தை படித்தாலும் கவியின் மீது காதல் கொண்டவன்....😍
சுட்டெரிக்கும் சூரியனோடு
சுதந்திரமாய் வியர்வைக் குளியல்!
பட்டாம் பூச்சியின் முதுகில் ஏறி
பூவனச் சுற்றுலா!
தென்றலோடு
தேநீர் விருந்து!
குளிர் நிலவுடன்
கூட்டஞ் சோறு!
கடல் அலைகள் கேட்க
கதாகாலட்சேபம்!
சலசலக்கும் நதியோடு
சங்கீதக் கச்சேரி!
மழைத் துளிகளோடு
மனங்கொட்டி மாநாடு!
இயற்கையை இப்படி
ஏங்கி, ஏங்கிக் காதலிக்கும்
என் கதையில்
எதிரியென்று யாருமில்லை!
ஆம், இது உலகம் அதிகம்
கண்டிராதக் காதல் கதை!
உங்கள் இதயத்தை மிகவும் தொட்ட கவிதை எது ?
தமிழோ ஆங்கிலமோ வேறு மொழியோ எதுவாயினும் அந்த அனுபவத்தினை
விரும்பினால் ஏன் எப்படி எப்பொழுது என்ற சுய குறிப்புகளுடன் தாருங்களேன் !
நாங்களும் படித்துப் பார்க்கிறோம் .
SOLITARY REAPER என்ற WORDSWORTH ன் கவிதை என்னால் மறக்கமுடியாத
கவிதை. பள்ளியிறுதி படிக்கும் போது பாடப் புத்தகத்தில் இருந்தது.
கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் வித்திட்ட உணர்ச்சி மயமான
கவிதை . கவிஞன் SOLITARY REAPER பற்றிய புரியாத அவள் பாடல் பற்றிய
உணர்வுகளை சொல்லும் அழகே தனியானது மிகவும் உணர்ச்சி மயமானது .
படம் : ஆங்கிலக் கவிஞர் WILLIAM WORDSWORTH ( 1770--1850
நீ என்ன?
நாணலோ?..
நான் உன்னை
அடித்துச் சென்றாலும்!
என்னையே !
சரணாகதியாய்
பற்றி விட்டாயே...
நான் நாணுகிறேன்
உன் செயலை மெச்சி..
முடியும் என்று சொன்னால்
முடியாது என்று கூறும் வாய்க்கும்
முட்டுக்கட்டை போட்டுவிடலாம்
தோழர்களே..........
-தமிழ் பிரியன் அ.இலியாஸ்
ஆஹா பெருநாள்
அருமையான திருநாள்...
ஆண்டவன் நமக்களித்த
அழகான ஒருநாள்!
ஆர்ப்பரிக்கும் மனத
அசைபோடும் இனிதாய்
அதிரைப் பட்டினத்து
அந்தக்கால பெருநாள்!
அன்றிரவு முழுதும்
அமைதியில்லா உறக்கம்...
அதிகாலை தொழுகை
அதற்கடுத்து குளியல்!
குளியல் என்ற பெயரில்
கும்மாலம் குதூகலம்...
குளத்து மேட்டிலிருந்து
குபீர் பாய்ச்சல் குட்டிக்கரணம்!
உச்சந் தலை முதல்
உள்ளங் கால் வரை
உஷ்ணம் தீர உடம்பில்
உம்மா தேய்த்த எண்ணெய்!
எண்ணெய்ப் பிசுக்கெல்லாம்
எங்கெங்கும் மிதக்க
வெட்டிக்குளமெல்லம்
தொட்டு விளையாட்டு..
உள்நீச்ச லோடு
கண்டு விளையாட்டு!
புத்தம்புது கைலி
புதிதாய் தைத்த சட்டை
புட்டாமாவு ப
காலத்தை நினைக்கிறேன்;
நிம்மதியை யாசிக்கிறேன்.
நெடுநேரம் தூங்குகிறேன்;
தயவு செய்து - என் அறைக்
கதவுகளைத் தட்டாதீர்கள்.
டையரியினுள் மனுக்கள்
சொட்டுச் சொட்டாய்
என்னுயிரை சிந்துகின்றது
நினைவுகளின் மீட்டல்கள்
கழுத்தை நெரிக்கின்றது
காற்றை போல் வந்தவள்
பூகம்பமாய் மாறினாள்
மழலை போல் சிரித்தவள்
என் ஆயுளை முடிவுக்கு
கொண்டு போய் விட்டாள்
போர்க்களமும் இல்லை;
பகைவர்களும் இல்லை;
ஆனால் - என்னை மட்டும்
துப்பாக்கிகள் சுடுகிறது
மார்புக்குள்ளும் வேதனை
கடிகாரத்தின் சுவாசத்தை
உள்வாங்கி நிறைகிறது
அவளுக்காய் எழுதப்பட்ட
என்னிதயத்தை - இன்று
அவளே தூக்கி வீசிவிட்டாள்
பட
முடியும் என்று சொன்னால்
முடியாது என்று கூறும் வாய்க்கும்
முட்டுக்கட்டை போட்டுவிடலாம்
தோழர்களே..........
-தமிழ் பிரியன் அ.இலியாஸ்
முடியும் என்று சொன்னால்
முடியாது என்று கூறும் வாய்க்கும்
முட்டுக்கட்டை போட்டுவிடலாம்
தோழர்களே..........
-தமிழ் பிரியன் அ.இலியாஸ்