சாசலின் பிரிசில்டா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சாசலின் பிரிசில்டா
இடம்:  தேனி,தமிழ்நாடு.
பிறந்த தேதி :  02-May-1975
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Jun-2015
பார்த்தவர்கள்:  76
புள்ளி:  0

என்னைப் பற்றி...

ஆசிரியர், கவிஞர், பேச்சாளர்,கணித்தமிழ் ஆய்வாளர்/ஆர்வலர்.

என் படைப்புகள்
சாசலின் பிரிசில்டா செய்திகள்
சாசலின் பிரிசில்டா - கீத்ஸ் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Apr-2016 10:18 am

கோவிலில் பெண்கள் நுழைந்ததால் கற்பழிப்பு அதிகமாகும் என்று துவாரகா சங்கராச்சார்யார் கூறியது பற்றி உங்கள் கருத்து என்ன?

மேலும்

மிகவும் தவறான கருத்து 18-Apr-2016 8:18 pm

                    தமிழின் பெருமைகள் சில…! 

 தமிழின் பண்டைய இலக்கியத்தில் தமிழின் பெருமை: 
  1.     “ என்றுமுள தென்தமிழ்
இயம்பி இசை கொண்டான் ”
“ எத்தி றத்தினும் ஏழுல கும்புகழ்
முத்தும் முத்தமி ழும்தந்து முற்றலால்”. - கம்ப இராமாயணம், 
  2.     “ இருந்தமிழே யுன்னால் இருந்தேன் இமையோர்
விருந்த மிழ்தம் என்றாலும் வேண்டேன்” - தமிழ் விடுதூது
  3.     “பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினு மோர் எல்லையறு பரம்பொருள் முன்னிருந்தபடி இருப்பது போல் கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன் உதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்”                                                            (மனோன்.)  - பேராசிரியர் சுந்தரம் பிள்ளை 
  4.     ஆரவாரம் பெருக்காதது ஆற்றல் வீணாகத் தேவையற்றது உள்ளது உள்ளவாறு உணர்த்தும் திறத்தது வீண்காலச் செலவுக்கு இடம் அளிக்காதது பயில்வதற்கு எளிதானது பொருள் அறிதற்கு எளிதாயது பாடுதற்கு இனிமை பயப்பது வழிபடுவோர் துதித்தற்கு இனிமை பயப்பது சாகாக் கல்வியை உணர்த்தும் திறமுடையது திருவருள் வலத்தால் வாய்த்ததெனப் போற்றப்படுவது தமிழ் -  இராமலிங்க அடிகளார் 
தமிழ் உரையாசியர் வரிகளில் தமிழின் பெருமை: 
  1.   “ஒருந் தமிழொரு மூன்றும் உலகின் புறவகுத்துச்       சேரன் தெரித்த சிலப்பதிகாரம்”   “பழுதற்ற முத்தமிழின் பாடற்குரையின் றெழுதத் துணிவதே யான்” - அடியார்க்கு நல்லார்- சிலப்பதிகார உரைப் பாயிரம். 
 தமிழ் இலக்கண நூலில் தமிழின் பெருமை: 
  1.     ‘இனிமையும் நீர்மையும் தமிழென லாகும்’ - பிங்கலந்தை என்னும் நிகண்டு நூல் 2.    2. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி  -புறப்பொருள் வெண்பாமாலை. 
 தற்கால இலக்கியத்தில் தமிழின் பெருமை: 
  1.     “ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்”       
‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம்       பரவும்வகை செய்தல் வேண்டும்.       
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்       தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!’      
 “வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்,       வாழிய பாரத மணித்திரு நாடு” – பாரதி 
  2.   “தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்தத்       தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்குநேர்”       “இனிமைத் தமிழ் மொழி எமது-எமக்       கின்பந்தரும்படி வாய்த்த நல் அமுது!” – பாரதிதாசன். அறிஞர்களின் கூற்றுகளில் தமிழின் பெருமை: 
  1.   “தமிழ் வடமொழியின் மகள் அன்று; அது தனிக்குடும்பத்திற்கு உரியமொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி; தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்.” - டாக்டர் கால்டுவெல். 
  2.     தமது கல்லறையில் ‘ஒரு தமிழ் மாணவன்’ என்று பொறிக்கச் செய்தார்.- டாக்டர் ஜி.யு.போப், 
3.      திராவிட மொழிகளின் பழம் பெருமைக்கும், கலப்பில்லாத தூய மொழிவளம், இலக்கிய வளம், பண்பாட்டு வளம் ஆகியவற்றுக்கும் ஒரு சேம அருங்கலச் செப்பமாக விளங்குவது தமிழே.
- பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார்      

மேலும்

பழங்கால சுவடுகளிலிருந்து புரட்டப்பட்ட தகவல் இவை..என்றும் தமிழ் மொழியின் அழகும் சிறப்பும் இந்த மண்ணை விட்டு அழியாது வெற்றி பெற வாழ்த்துக்கள் 18-Apr-2016 11:40 pm
கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) செ செல்வமணி செந்தில் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
13-Apr-2016 12:03 pm

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எழுத்து நடத்தும் எண்ணம் போட்டி

எண்ணம் பகுதியில் தமிழ் மொழியின் பெருமை பற்றிய கூற்றுகளை பகிரவும். (Share Tamil Language Facts). உங்கள் பகிர்வு எழுத்து, படம் மற்றும் காணொளி என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

சிறந்த தமிழ் கூற்றிற்கு பரிசு வழங்கப்படும்.
எண்ணம் சமர்பிக்க இறுதி நாள் : 18 / 04 / 2016 

எடுத்துக்காட்டு:
1. உலகத்தில் உள்ள 75 மில்லியன் மக்கள் தமிழ் மொழியை பேசுகிறார்கள்.2. உலகத்தில் தமிழ் பேசக்கூடிய மக்களில் ஒருகால் அளவு மக்களுக்கு தமிழ் படிக்கவோ, எழுதவோ தெரியாது.3. உலகத்தில் மொத்தம் 6809 மொழிகள் உள்ளன. இதில் பேசும் மற்றும் எழுதும் மொழிகள் 700. அதில் 100 மொழிகள் தங்கள் சொந்த  அகரவரிசை கொண்டது. 6 மொழிகள் செம்மொழி ஆகும். அவை ஹீப்ரூ, ஓல்ட் கிரேக், சமஸ்க்ரிதம், சீனா மொழி மற்றும் தமிழ். அனால் ஹீப்ரூ, சீனா மொழி மற்றும் தமிழ் மட்டும் தான் இன்றும் மக்களால் பேசப்படுகின்றது. ஆகையால் தமிழன் என்பதில் நாம் பெருமை கொள்வோம்.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.



மேலும்

எந்த பக்கத்தில் முயற்சித்தீர்கள்? சேர்க்கும் போதா அல்லது திருத்தும் போதா? 18-Apr-2016 2:11 pm
தமிழ் மொழி ஆறு கோடி மக்களின் தாய்மொழி அறு சுவையை மிஞ்சுகின்ற வாய்மொழி அகரத்தில் தொடங்கும் சிகரமொழி தகரத்தை தங்கமாக்கும் லகரமொழி அகத்தியன் கண்ட அமுதமொழி தமிழன் அகத்தினுள் கொண்ட குமுதமொழி ழ விற்கு பக்கத்தில் க வரிசை கொண்ட தனிமொழி க வை மெய்யாய்க் கனியவைக்கும் கனிமொழி சொற்சாலத்தால் மயங்கவைக்கும் மதுமொழி கல்தொன்றும் முன்தோன்றிய முதுமொழி வள்ளுவன் வார்த்தெடுத்த குரள்மொழி வல்லினத்தை வளர்த்தெடுக்கும் குரல்மொழி ஔவையார் பார்த்தெடுத்த வளர்மொழி அங்கவை கோர்த்தெடுத்த மலர்மொழி மதுரைச் சங்கத்தில் குடியிருக்கும் வான்மொழி மலரின் அங்கத்தில் குவிந்திருக்கும் தேன்மொழி உலகத்து மொழிகளின் செம்மொழி இம்மொழிக்கு ஈடு இணை எம்மொழி ? தமிழுக்காக தலைவணங்கும் என் சிரம் தமிழ் வளர என் உடல் ஆகட்டும் உரம் .. 18-Apr-2016 12:35 pm
எண்ணம் பகுதியில் எண்ணம் சமர்பிக்க முடியவில்லை..பதிந்தால் எண்ணம் சமர்ப்பிக்கப்படவில்லை. இது உங்கள் எண்ணம் அல்ல என்று வருகிறது ஏன்? 17-Apr-2016 4:59 pm
தொன்மை வாய்ந்த தமிழ் மொழி துவண்டு விழாத தனி மொழி தனித்துவமான எழுத்துகளை தன்னகத்தே கொண்ட மொழி 1 நான் இறக்கும்வரை அன்னையாக வாழும் என் அன்னைத்தமிழ் இறந்த பின்னும் பிள்ளையாகி தவழ்ந்துவரும் பிள்ளைத்தமிழ் 2 வாழும் தமிழ், உயர்ந்து வளர்வதும் தமிழ் வீழும் என்று சொல்லாதீர் வெறும் கனவு காணாதீர் 3 தமிழ் மொழி குறித்து கூற்றுகளை சமர்பித்து விட்டேன். படம் வரைய வேண்டுமா என்பதை தெரியப்படுத்தவும் 16-Apr-2016 1:06 pm
கருத்துகள்

நண்பர்கள் (8)

அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (8)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (8)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு
மேலே