R Mathan kumar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : R Mathan kumar |
இடம் | : Tirupur |
பிறந்த தேதி | : 01-Nov-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 67 |
புள்ளி | : 19 |
காதல்
ஓர் ஆழ்கடல் என்று நினைத்து
அதில் பயணம் செய்ய பயந்தேன்,
அவள் கப்பலாக வந்தாள்
கடலின் அழகை அறிய வைக்க
காதல்
இரவு என்று எண்ணி
இருளை கண்டு பயந்தேன்
அவள் என் பயத்தைப்
போக்கினால் நிலவாக வந்து
காதல்
மேகம் என்று நினைத்து, தொட
முடியாமல் போய்விடுமோ என ஏங்கினேன்,
ஆனால் அவள் மழையாக
வந்து என்னை தழுவினாள் ...
காற்றினால் மரம் அசைகிறதா
மரத்தினால் காற்று உருவாகிறதா ?
என்ற கேள்வி போலவே
அவள் வந்ததால் காதலின்
அருமையை புரிந்து கொண்டேனா ?
இல்லை
காதல் வந்ததால் அவளின்
அழகை அறிந்து கொண்டேனா ?
என்பதும் கேள்வி குறியாகவே
அம்மா
நீ வாழ்ந்தது போதும்
சொர்க்கம் செல்.
நிரந்தரமாய் தங்கி விடாதே..
எனக்கு மகளாய்
பிறந்து வா
நான் பட்ட கடனை
தீர்க்க வேண்டும்
தன்னைச் சுற்றி இருக்கும்
இடத்தை சுத்தமாக வைக்க
தன்னையே அசுதமாக்கிகொள்ளும்
குப்பைத் தொட்டி...