ராசுகுட்டி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ராசுகுட்டி |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 18-Apr-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 83 |
புள்ளி | : 0 |
எங்கள் ஊர் ராஜகுமாரி
இன்னும்
அவளாகத்தான்
இருக்கிறாள்....
அவளின் இறப்பில்
கலந்து கொள்ளதவர்கள்
அனைவருமே அவள் இரவைக்
கொன்றவர்கள்.....
முதல் சுடிதாரை
முதல் ஜீன்ஸ் பேண்ட்டை
அவள்தான் அறிமுகம்
செய்தாள்....
ஆனால்
பெரும்பாலும் அவளாடைகள்
கொடியில்தான்
தூங்கிக் கொண்டிருக்கும்....
எப்போதும் மூடியே
கிடக்கும் கதவின் பின்னால்
பவுடரின் தீரா தனிமையை
இப்போதும் உணரலாம்....
ஆர்வக் கோளாறில்
காசு சேர்த்து
கதவு தட்டிய அன்று,
அவள்
பார்த்த பார்வையில்
எங்கள் கடவுளுக்கு
பேய் பிடித்ததாக
நினைத்தேன்....
பின் ஒரு காலத்தில்
என்னை வரச் சொன்ன
அவள் கிழவி ஆக
இருந்தா
என் பெயர் நித்யா !
அட வித்யா சத்யா மகி
சகி என எதுவாகவும்
என் பெயர் இருந்தால் என்ன ?
தத்தித் தத்தித் தவழும்
வயதில் என் கால்களை
தொட முயலும் கைகளை
நான் ஒரு போதும்
ரசிக்க முற்பட்டதில்லை !
பள்ளி செல்லும் வழியில்
சீருடை தாண்டி தீண்டும்
பார்வைகளுக்காக என்
தலையில் "நான் சீதை"
என்று விளம்பர படம்
ஒட்டிக்கொண்டு தினமும்
நடக்க இயலாது !
உன்னோடு வைத்துக்கொண்டு
வீடு வரமால் பள்ளி முழுக்க
டம்மாரம் அடித்துக்கொண்டு
வந்துருக்கியே சனியனே
என்று பள்ளியில் வயதுக்கு
வந்த மகளை திட்டும் அம்மாவின்
கோபம் நியாயம் தானா ?
யோசித்து சொல்கிறேன் !
தோழன் என்று சொல்லி
தோ
தாங்க முடியாத துக்கத்தை
தூங்க முடியாத தூக்கத்தை
தந்தவளே!!
உன் மடிமீது துயில ஆசையில்லை
உந்தன் முகம் காண ஆசை ....
உன் தோள்சாய ஆசையில்லை
உன்னைத்தொட்டுப்பார்க்க ஆசை .....
உன் கன்னத்தோடு ஒட்டிக்கொள்ள ஆசையில்லை
உன்னைக் கண்ணால்காண ஆசை....
உன் உதட்டால் முத்தம்பெற ஆசையில்லை
உன் ஊமைவாயால் ஒருவார்த்தைக் கேட்க ஆசை...
உன் கைகோர்த்து நடக்க ஆசையில்லை
ஒருமுறை ஒரேயொருமுறை "அம்மா" என்றழைக்க மட்டுமே ஆசை.........
வரம் தருவாயா ???????
கண்ணே கண்மணியே
கட்டிக்கரும்பே என
காணா தேசத்தில் இருக்கும்
தாய்க் கண்ணீர் வடிக்கிறேனடி !
கண்ணாய் வளர்த்த தாயவள்
கதறும் காட்சி கண்முன் வருகுதடி !
அழகிய மலரே உன்னை அலற வைத்த
காமுகனை நஞ்சென சொல்லேனடி
அவன் நஞ்சை உமிழும் நச்சுப் பாம்படி !
குப்புற படுத்தாலும் அழுகைக்
குமுறிக் கொண்டு வருகுதடி !
எப்படி மிரண்டிருப்பாய் ,கதறியிருப்பாய் ,கத்தியிருப்பாய்
இப்படி பட்டியல் போட்டாலும் கூட
இப்பாருலகம் அவர்களைப் பாராமல் போகுமடி !
பொத்தி பொத்தி
பொம்மையோடு பொம்மையாய்
வைத்திருந்த பொக்கிசமே !
உன்னை தெருநாய் கடித்ததென்று
கண்ணை துடை!
உலகமெனும் தோட்டத்தில்
உதித்து வந்த மொட்டுகள் நீங்க
எழுத்தில் அடியெடுத்து வய்த்த என் முதல் பொழுது இது..........
இனி எனது கவிதைகளும் எண்ணங்களும் தொடர என் இனிய தமிழ் சான்றோர்களை வணங்குகிறேன்.
தமிழ் வாழ்க!......... தமிழர் வாழ்க!.........