பாபு - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  பாபு
இடம்:  சின்னசெட்டிக் குறிச்சி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Aug-2014
பார்த்தவர்கள்:  83
புள்ளி:  18

என் படைப்புகள்
பாபு செய்திகள்
பாபு - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2015 11:59 pm

மூச்சுத் திணறி,
வெளிக்கசியும் உயிர்மறிக்கும்,
உத்திகளற்ற வேளையில்,
நினைவில் மின்னும் உன் முகம்
ஆக்சிஜனேற்றிப் போகிறது!

குரல்வற்றி-
மௌனம் அடர்ந்த சாலையில்
திகிலடைகிறது வாழ்க்கை!
உன் குறுஞ்செய்தி ஆற்றுகிறது....
எழுபிறவிக்கான சொற்பொழிவை!

புதியதொரு கிரகத்தினுள்
தொலைந்துபோன என் நினைவுகள்
பூமிக்கான வழியை
விசாரித்தபடி அலைகின்றன!
உன் கனவொன்று கரம்நீட்ட
நிஜத்திற்கு மீள்கிறது....
நமக்கான இடைவெளியில்
முட்டிக் கதறியபடி!

பொறுக்குவார் யாருமற்று,
சிதறிக் கிடக்கிறது...
உடைத்து நொறுக்கப்பட்ட இதயம்!
ஒவ்வொரு சில்லும்
சிறகு விரிக்கிறது!
உன் வளையல் கரங்களின்
வாசனை தேடி!

என் வலிகள்

மேலும்

அற்புதம்... 17-Feb-2015 12:19 am
பாபு - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Nov-2014 12:54 am

உபதேசிக்கப்பட்ட
கீதையின் மூலத்திலிருந்து
உயிர்த்தெழுகின்றனர்...
குருவும் ஓர் சீடனும்!

விழி பிதுங்கச் சீடனும்
வழி சொல்லக் குருவுமாய்
வாழ்க்கை நதி பாயும் வனாந்தரத்தில்
ஒரு சிட்டுக் குருவிக்குக் கிடைத்த
பற்றுக் கொம்பு ஆசிரியர்!

ஆசிரியர்கள்: அடிகளின் வலிகளை
அயலூர் அனுப்பிவிட்டு,
மறுகணம் மலர்வாய்
மாறா இன்முகமாய்.;
என் ஆணவம் ஒருமுறை
ஒடிந்து நிமிரும்!

மாணவர்கள்: ஆடுகள் புகத் தயங்கும்
அரிதாய்ப் புற்கொண்ட
களர்நிலம் நான் நேற்றுவரை!
உன் கைபட்ட பின்
ஆகாயத் தாமரையின்
வித்துகள் விடைத்து நிற்கும்
விளைநிலம் நான் இன்று!

ஆசிரி; உயரமாய் நீ வளர
உம்மில் யாம் வெட்டுவது
கிளைகளை மட்டு

மேலும்

வரிகளுக்கு வணக்கம் !! வாழ்த்துக்கள் !! 12-Nov-2014 7:10 am
பாபு - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Oct-2014 4:31 pm

என் நியூரான்களின்
செத்துப்போகாத செல்களில்
நீக்கமற நிறைந்திருக்கும்
நீயே என் 'கன்னி'வெடி!

நினைவுகளின் பிஞ்சுவிரல்
சுற்றிச் சுழற்றியதால்
என் கூரைமுழுதும்
சிதறி மிளிருகிறது....
உன் சிரிப்பு மத்தாப்பு!

நீ பிரியம் உதிர்த்த நாட்களைப்
பற்றவைக்காமலேயே
சுற்றி வருகிறது....
மனச் சங்குசக்கரம்!

கைபேசியில் பொதிந்திருக்கும்
குறுஞ்செய்தியில் கருத்து குவிய,
மார்பில் குத்துகிறது....
எப்போதோ ஏவப்பட்ட
வார்த்தை ராக்கெட்!

நட்பு- நேசம்;
அன்பு- ஆராதனை;
காதல்;- காமம்...என
என் இதயஇலை முழுதும்
இதமாய்ப் பரிமாறினாய்....
காதல்ப் பலகாரம்!

முளைத்து- மரித்து-
மீண்டும்
துளிர்த்ததொரு நேசத்தி

மேலும்

"முளைத்து- மரித்து- மீண்டும் துளிர்த்ததொரு நேசத்தில் மாறிமாறி எறிந்துகொண்டோம்... ஆணவ அணுகுண்டுகளை! " அருமையான வரிகள் தோழமையே.... 24-Oct-2014 12:48 pm
அழகான படைப்பு தோழா...!! 23-Oct-2014 4:43 pm
பாபு - Arun md அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Oct-2014 12:04 pm

திரையுலகினர் உண்ணாவிரதம் பற்றிய உங்கள் கருத்து?

மேலும்

வேறு வழியில்லை, அம்மா ஜாமீனில் வந்த பிறகு தங்கள் தேவைகளுக்காக யாரை நாடுவது, அடுத்த ஆட்சி வரும் வரை. 05-Oct-2014 5:09 pm
நடிக்கரானுங்க. 03-Oct-2014 8:09 pm
Suyanalavathikal...kootam.Neethidurai meethu thakkual..All India judicial method Failed. Vazha India Constution Law. 03-Oct-2014 12:16 pm
அவன் ரெண்டு பொண்டாட்டியையும் நாலு குழந்தைகளையும் யார்ரா காப்பாத்துவா? சுனா பனா காமெடியைப் பார்க்கவும். 01-Oct-2014 10:30 pm
பாபு - பாபு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Sep-2014 11:59 pm

சொர்க்கமோ? நரகமோ?
பழக்கப்படாதவொரு உலகின்
இல்லாத வீட்டினுள்
இருக்கிறேன் நான்!

காலம் கடந்த பெருவெளியினுள்
அணுத்துகளாய் மிதந்தலைந்தாலும்
நினைவுகளின் மீள்பார்த்தலில்
நிலைத்து நிற்கிறது இந்நாள்!

இரட்டை நிலவுகளாய்
இருள்கிழித்த
ஒளிவெள்ளப்பெருவிளக்கு
ஒடுங்கிடுமோவென அஞ்சி
விரைகிறேன் இல்லம் நோக்கி!
என் கால்களைக்
கடன் வாங்கிப் போனது யார்?

இலக்கணப்பிழை தாங்கி
இறைந்து கிடக்கும்
மழழைமொழி கொத்த-உன்
முற்றத்திற்கு விரைகிறேன் காகமென!
திமிரும் என் சிறகுகளைத்
தீ மூட்டியது யார்?

தூக்கத்தைத்
தூர்வாரிக்கொண்டிருக்கின்றன...
உனையணைத்துத்
துயில்கொண்ட விழிகள்!

உன் எச்சில்பட்ட
எல்லா மி

மேலும்

அருமை தோழரே . 25-Sep-2014 9:22 pm
ஆஹா மிக அற்புதமான படைப்பு... "உன் அன்பிற்கான தாகத்தை தீர்க்கமுடியா என் இயலாமையினுள், உயர்ந்ததொரு வாசனையாய் உதிர்ந்து மலர்கின்றன ஞாபகங்கள்... மார்பில் நீ பொழிந்த மூத்திரமென! " -- எதார்த்தம் மிக அருமை தோழமையே... 25-Sep-2014 9:14 pm

பாபு - பாபு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Sep-2014 11:41 pm

மூடி விட்டே
போயிருக்க வேண்டும்;
நமை பினைக்கும்
எல்லா வாய்ப்புகளையும்!

விவாதத்திற்கே இட்டுச்செல்லும்
வார்த்தைகளும்
விரயமாகும் புன்னகையும்
ஞாபகக் கிடங்கில் தேங்குகிறது..
கழிவுகளென!

பந்தியில் சிதறிய
சோற்றுப் பருக்கைகளென
என்னில் ஒட்டிப்
பிசுபிசுக்கும் உன் நினைவுகளை
எப்படிக் கழுவுவதென
மயங்கி நிற்கையில்,
இலையென எறியப்படுகிறது...
இதயம்!

மேலிழுத்து-
கீலொடித்து-
தேவைக்கென வளைத்துவிட்டு,
நீயிட்ட கோலத்தினுள்
தொலைந்தே போனேன்..
புள்ளியாய்!

இன்னும்
எடுக்கப்படாத அந்தப் புகைப்படத்தினுள்
இருப்போம் நாம்....
இருப்பதாய் நம்பப்பட்ட
நேசத்தோடு!

நேசிக்கமுடிகிற எதிரியாய்,
இரசிக

மேலும்

நன்றி! 05-Sep-2014 10:10 pm
எனது பதிவை வாசித்த உள்ளத்தை நேசிக்கிறேன்! 05-Sep-2014 10:09 pm
நன்றி! 05-Sep-2014 10:06 pm
நன்று 04-Sep-2014 11:50 pm
பாபு - பாபு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Aug-2014 12:46 am

(எனது அண்ணனின் மைத்துனரும் எனது ஆருயிர் நண்பனுமாகிய திரு.சுரேஷ் அவர்கள், சாலை விபத்தொன்றின் பெருத்த வயிற்றினுள் இரையாகிப் போனார். 31 வயதான ஒற்றை மகனை இழந்து தவித்த தந்தையின் பேரழுகை, இன்னும் ஒலிக்கிறது என் செவிகளில். அரிதாய்த் தலைகாட்டும் என் கண்ணீர், அன்று மட்டும்.. ஆறாய்! என் மடிகிடத்திய, அவன் சடலத்திலிருந்து, நட்பையெலாம் உறிஞ்சிக்கொண்ட என் இதயமெங்கும், திட்டுத் திட்டாய் வேதனை! தாங்கவியலா வலிகளைத் தரையிறக்கும் என் முயற்சியின் முதற்படி எப்போதும் கவிதையே! கவிஞன், கருப்பொருளாய் மாறும்போது, உணர்தலும் வெளிப்படுத்துதலும் வசப்படுகிறது. சதாரண நிகழ்வாகிவிட்ட சாலைவிபத்துகள் ஒவ்வொன்றும், யாரோ சிலரின் வ

மேலும்

பகிரப்படும் துயரங்கள் பாதியாய்க் குறைந்து போகும்! ஒரு மரணத்தின் வலியினை, கனிவோடு உள்வாங்கி கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி! 29-Aug-2014 8:29 pm
நன்றி! 29-Aug-2014 8:23 pm
நன்றி! 29-Aug-2014 8:22 pm
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் ! 25-Aug-2014 10:18 pm

மேலும்...
கருத்துகள்

மேலே