புதிய தலைமுறைப் பெண்கள்! - ஆண் போக்கிரி களுக்குஎ மன்கள்! அழகைக் கண்டு ஆசை கொண்ட காலம் போயாச்சே! - அவள் அறிவைக் கண்டு அச்சம் கொள்ளும் காலம் வந்தாச்சே! வெட்கம் கண்டு விரட்டிச் சென்ற காலம் போயாச்சே! - அவள் வீரம் கண்டு வேர்த்துப் போன காலம் வந்தாச்சே! மௌனம் கண்டு மடக்கப் பார்த்த காலம் போயாச்சே! - அவள் பேச்சைக் கண்டு பிரமிக் கின்ற காலம் வந்தாச்சே! அடக்கம் கண்டு அதட்டப் பார்த்த காலம் போயாச்சே! - அவள் ஆற்றல் கண்டு அதிர்ந்து போன காலம் வந்தாச்சே! பொறுமை கண்டு புண்ணாய்ச் செய்த காலம் போயாச்சே! - அவள் திறமை கண்டு திகைத்து நிற்கும் காலம் வந்தாச்சே! பணிவைக் கண்டு பந்தாய் எற்றும் காலம் போயாச்சே! - அவள் துணிவைக் கண்டு துக்கம் கொள்ளும் காலம் வந்தாச்சே! மென்மை கண்டு மேயப் பார்த்த காலம் போயாச்சே! -அவள் வன்மை கண்டு வாலைச் சுருட்டும் காலம் வந்தாச்சே! என்ன செய்வாள் என்றே மிதித்த காலம் போயாச்சே! - அவள் எதையும் செய்வாள் ஏன்வம் பென்னும் காலம் வந்தாச்சே! பார்த்தாள் சிரித்தாள் படிவாள் என்று பல்லைக் காட்டாதே! - அவள் பார்வை வேறு பாதை வேறு பாழாய்ப் போகாதே!


வழி : Balaji Ganesh கருத்துகள் : 0 பார்வைகள் : 83
4
Close (X)
புதிதாக இணைந்தவர்

மேலே